தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம தான் துணை முதல்வர் ஓபிஎஸ்சின் சொந்த ஊர். இந்த ஊரிலேயே ஓபிஎஸ் சின் உடன் பிறந்த சகோதரரான ஓ.ராஜாவும் குடியிருந்து கொண்டு அரசியல் வாழ்க்கையில் ஈடுபட்டு வந்தவருக்கு நகர் மன்ற தலைவர் பதவியையும் ஓபிஎஸ் கொடுத்து இருந்தார்.
இந்த நிலையில் தான் கடந்த 19 ம்தேதி மதுரை ஆவின் தலைவராக ஓ.ராஜா தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அன்று மதியமே அதிமுகவின் கட்சி ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓபிஎஸ்சும்., கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான இபிஎஸ் சேர்ந்து ஓ.ராஜாவை கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து அதிரடியாக தூக்கியதுடன் மட்டுமல்லாமல் கட்சிக்காரர்கள் எந்த ஒரு தொடர்பும் ஓ.ராஜாவுடன் வைத்துக் கொள்ளக் கூடாது என அதிரடியாக அறிக்கையும் விட்டனர்.
அதைக்கண்டு ராஜாவும் அவருடைய ஆதரவாளர்களும் அதிர்ச்சி அடைந்ததுடன் மட்டுமல்லாமல் இப்படி உடன்பிறந்த அண்ணனே கட்சியிலிருந்து தூக்கி விட்டார் என்று நினைத்து மனம் நொந்து போய் விட்டார்
ஒ.ராஜா.
இந்த நிலையில் தான் தன்னை கட்சியில் இருந்து ஓரம் கட்டி அசிங்கப்படுத்திய அண்ணன் ஓபிஎஸ் முகத்தில் முழிக்காமல் மாமனார் ஊரான உப்பார்பட்டி அருகே உள்ள போலேந்திரபுரத்திற்கு குடிபோய் பால் சொசைட்டி வைக்கப் போவதாகவும் தகவல் வெளியாகி வந்தது.
இந்த நிலையில்தான் திடீர் என ராஜா நேரில் வந்து வருத்தம் தெரிவித்து கடிதம் கொடுத்ததாக கூறி மீண்டும் ஓ.ராஜாவை கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஒபிஎஸ்சும். துணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான இபிஎஸ் சும் சேர்ந்து கட்சியில் சேர்த்து கொண்டனர்.
இந்த விஷயம் பெரியகுளத்தில் உள்ள ஓ.ராஜாவின் ஆதரவாளர்களின் காதுக்கு எட்டியதின் பேரில் அங்கங்கே இனிப்பு கொடுத்து கொண்டாடியதுடன் மட்டுமல்லாமல் மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் நாராயணன் தலைமையில் ஓ.ராஜா ஆதரவாளர்கள் மூன்றாம் தென்றல் அருகே உள்ள ஓபிஎஸ் டீ கடைக்கு எதிரே பட்டாசு வெடித்து தங்கள் சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டனர். அதுபோல் மாவட்டத்தில் போடி, தேனி உள்பட சில பகுதிகளிலும் ஓ ராஜா ஆதரவாளர்கள் அங்கங்கே பட்டாசு வெடித்து தங்கள் சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டதால் மீண்டும் ஓ.ராஜாவின் அரசியல் செல்வாக்கு ஆரம்பமாக போகிறது.