சே குவேராவின் 50 வது நினைவு தினம்: பொது மக்கள் கூடி அஞ்சலி
அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளால் ஏழை நாடுகள் அடிமைபட்டு கிடந்ததை எதிர்த்து போராடியவர் சே குவாரா. முதலாளித்துவ ஆட்சியின் பிடியில் இருந்து கியூபா போன்ற நாடுகளுக்கு விடுதலை பெற்று தந்த அவர், பொலியாவில் 1967-ம் ஆண்டு அக்டோபர் 9-ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த நிலையில் சே குவாராவின் 50-வது ஆண்டு நினைவு தினம் கியூபாவில் அனுசரிக்கப்பட்டது. சே குவெராவின் உடல் அடக்கம் செய்யப்பட்டு, சிலை வைக்கப்பட்டிருக்கும் சாண்ட்டா கிளாராவில் கூடிய பொது மக்கள், அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.