Skip to main content

ட்விட்டரில் புளூ டிக் வசதி நிறுத்தி வைக்கப்படுகிறது - எலான் மஸ்க்

Published on 22/11/2022 | Edited on 22/11/2022

 

BlueTick feature on Twitter is being suspended - Elon Musk

 

உலகின் நம்பர் ஒன் பணக்காரரும், டெஸ்லா கார் நிறுவனம் மற்றும் ஸ்பேஸ்-எக்ஸ் விண்வெளி ஆய்வு மைய நிறுவனருமான எலான் மஸ்க் உலகின் முன்னணி சமூக வலைத்தளமான ட்விட்டரை தன்வசப்படுத்திக்கொண்டார். ட்விட்டரை வாங்கியதும் அதில் ஏராளமான மாற்றத்தைச் செய்தார். ஏராளமான ஊழியர்களை வேலையிலிருந்து நீக்கினார். 

 

இதனைத் தொடர்ந்து ட்விட்டரில் அதிகாரப்பூர்வ கணக்கு எனப்படும் நீல வண்ண டிக் குறியீடு பயன்படுத்த மாதம் 8 டாலர் வசூலிக்கப்படும் திட்டம் அமல்படுத்தப்பட்டது. 

 

இதனைத் தொடர்ந்து ஏராளமான கணக்குகள் கட்டணம் செலுத்தி நீல வண்ணக் குறியீடுகளைப் பெற்றனர். அதே சமயத்தில் ஏராளமான போலிக் கணக்குகளும் இந்திய மதிப்பில் ரூபாய் 600 கட்டணம் செலுத்தி நீல வண்ண டிக் குறியீட்டினை பெற்றதால் குழப்பம் ஏற்பட்டு நீல வண்ணக் குறியீடு வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

 

பிரபலங்களின் அதிகாரப்பூர்வ கணக்குகளை அடையாளம் காண ட்விட்டரில் நீல வண்ணக் குறியீடு இருந்து வந்தது. எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கிய பின் நீல வண்ண டிக் வேண்டுமெனில் கட்டணம் செலுத்தும் முறை அமலுக்கு வந்தது. பிரபலங்கள் ஒரு புறம் கட்டணம் செலுத்தி நீல வண்ண டிக் வாங்கினால், அவர்கள் பெயரில் செயல்படும் போலிக்கணக்குகளும் கட்டணம் செலுத்தி நீல வண்ண டிக் பெற்றுள்ளனர். இதனால் பிரபலங்களின் பெயர்களில் பல போலிக் கணக்குகள் உருவானது குழப்பத்தை ஏற்படுத்தியது. 

 

பலதரப்புகளில் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் இது வரை மௌனம் காத்து வந்த எலான் மஸ்க் போலிக்கணக்குகள் தடுக்கப்படும் என்ற நம்பிக்கை வரும் வரை இந்தத் திட்டத்தினை நிறுத்திவைப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களுக்கு வெவ்வேறு நிறங்களில் டிக் வழங்கப்படும் என்றும் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

 


 

சார்ந்த செய்திகள்