காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து நாகையில் பழங்குடியின மக்கள் கும்மியடித்தும், பாட்டுபாடியும் நூதன முறையில் போராட்டம் நடத்தினர்.
நாகையில் ஆதியின பழங்குடி மக்கள் காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பிய அவர்கள், கடைமடை வரை காவிரி நீர் கொண்டுவராததை கண்டிக்கும் வகையில் கும்மியடித்து நூதனமுறையில் பாட்டுபாடி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். அப்போது அய்யய்யோ தண்ணீர் இல்லாமல் உயிரே போகுதே, பயிர்கள் காயுதே என பாட்டின் மூலம் தங்களது வேதனையை வெளிப்படுத்தினர்.
காவிரி தண்ணீருக்காக போராடும் தமிழக விவசாயிகளின் போராட்டத்தில் பழங்குடியினமக்கள் என்றென்றும் துணை நின்று போராடுவோம் என்று அவர்கள் தெரிவித்தனர்.
இந்த போராட்டத்தில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டனர்.