டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியை தமிழகத்தைச் சேர்ந்த பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் வானதி சீனிவாசன், எம்.ஆர்.காந்தி, டாக்டர்.சி.கே.சரஸ்வதி, நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்பின் போது பா.ஜ.க.வின் மாநில தலைவர் எல்.முருகன் உடனிருந்தார்.
பிரதமரைச் சந்தித்தப் பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எல்.முருகன், "மகாபலிபுரம், தஞ்சை போன்ற ஆன்மீக சுற்றுலா தலங்களை மேம்படுத்த வேண்டும் என கோரினோம். தமிழகத்தின் வளர்ச்சிக்கு தேவையானதை பிரதமரிடம் பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர். நீர் சேமிப்பு பற்றி அறிவுறுத்திய பிரதமரிடம் நதிகள் இணைப்பு குறித்து பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் பேசினர்". இவ்வாறு எல்.முருகன் கூறினார்.
பிரதமரைத் தொடர்ந்து தமிழகத்தைச் சேர்ந்த பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவை நேரில் சந்தித்துப் பேசினார்.