தமிழ்நாட்டில் இன்று சில இடங்களில் மழை பெய்யும் சென்னை வானிலை அதிகாரிகள் தகவல்
தமிழ்நாட்டில் இன்று சில இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
ஆந்திராவின் வடக்கு பகுதியில் இருந்து கன்னியாகுமரி வரையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை இருப்பதால், இதன் காரணமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் இன்று ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.