Skip to main content

மாப்ள சீட்டு வாங்குவது முக்கியமில்ல ஜெயிக்கணும் - முன்னாள் அமைச்சரை கடுப்படித்த முதல்வர்!

Published on 02/04/2019 | Edited on 09/04/2019

பெரம்பலூர் எம்.பி. தொகுதியில் பெரம்பலூர், குளித்தலை, மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர், லால்குடி என திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 5 சட்டமன்ற தொகுதிகள் உள்ளடக்கிய எம்.பி. தொகுதியாக பெரம்பலூர் தொகுதி உள்ளது. 

 

இந்த தொகுதியில் கடந்த முறை அதிமுகவை சேர்ந்த மருதைராஜ் வெற்றிபெற்றார். 

 

election

 

தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பு முதல்வரை நேரடியாக சந்தித்த முத்திரையர் முக்கிய பிரமுகர்கள், முன்னாள் அமைச்சர்கள் எல்லாம் முதல்வரை சந்தித்து தேர்தலில் முத்திரையருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்தவர் சிவபதி தான் என்று அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. 

 

அதன் அடிப்படையில் தற்போது அவருக்கு சீட்டு  கிடைத்திருக்கிறது. 

 

திமுக கூட்டணியில் போட்டியிடும் ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தரின் தேர்தல் பிரச்சாரம், குறிப்பாக கூட்டணி கட்சி நிர்வாகிகளை கவனிக்கும் முறை என பெரிய அளவில் பேசப்பட்டிருக்கிறது. இதுவரைக்கு அவர் 4 ரவுண்ட் வரை பண பட்டுவாடா முடிந்தால் தொகுதியில் உள்ள கூட்டணி கட்சியினர் முதல் பொறுப்பாளர்கள் வரை எல்லோரும் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

 

election

 

இந்த தொகுதியில் அதிமுக மற்றும் அமமுக கட்சிகள் போட்டியிடுகின்றனவா? என சந்தேகப்படும் வகையில் திமுக கூட்டணி கட்சியினரின் பிரச்சாரம் பிரகாசமாக உள்ளது. செல்கிற இடங்களில் எல்லாம் பெருங்கூட்டமும், திரண்டு வருவதாலும் பிரச்சாரத்திற்கு முன்னதாக திமுக. தலைவர் ஸ்டாலின் பங்கேற்ற முசிறி பொதுக்கூட்டம் தமிழகத்திலே மிகப்பெரிய பிரமாண்டமான பொதுக்கூட்டமாக இருந்ததும் பெரிய உற்சாகத்தையே ஏற்படுத்தியுள்ளது. 

 

இந்த பொதுகூட்டத்தை ஏற்பாடு செய்த திருச்சி திமுக செயலாளர் கே.என்.நேருவும், கரூர் திமுக பொறுப்பாளர் செந்தில்பாலாஜி ஆகியோர் துணையோடு பெரிய அளவில் ஏற்பாடு செய்திருந்தனர். 

 

இந்த நிலையில் பெரம்பலூர் தொகுதி தொடர்பாக உளவுத்துறையின் அறிக்கை முதல்வர் எடப்பாடிக்கு கொடுக்கப்பட்டது. இதை பார்த்ததும் அதிர்ச்சியடைந்திருக்கிறார். அதில் பாரிவேந்தருக்கு நெருக்கமான அவர் முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள் மீது வழக்கு போட்டு உள்ளே தள்ளியும். சிவபதி இதை எதையும் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்பதையும் உளவுத்துறை குறிப்பு அனுப்பி உள்ளனர்.

 

election

 

எடப்பாடி பழனிச்சாமியும், சிவபதியும் ஆரம்பகால நண்பர் என்பதாலும் மாப்ள மாமா என அழைத்துக்கொள்ளும் வகையிலான நெருங்கிய நண்பர் என்பதால் எடப்பாடியிடம் உரிமையுடன் சீட்டு கேட்டு வாங்கினார். முத்திரையர் சமூகம் பெரும்பான்மையாக இருக்கும் தொகுதி என்பதால் எந்த பிரச்சனையும் இல்லாமல் எடப்பாடி சிவபதிக்கு சீட்டு ஒதுக்கி கொடுத்தார். ஆனால் உளவுத்துறையின் அறிக்கையில் சிவபதியின் பணப்பட்டுவா எந்த இடத்திலும் திருப்தியாக இல்லை என்றும். முதல் வேட்பாளர் அறிமுகம் கூட்டம் லால்குடியில் நடைபெற்றபோது கட்சிகாரர்களுக்கு பணம் கொடுக்கவில்லை என்று அடுத்த நாள் திருச்சியில் உள்ள சிவபதி வீட்டிற்கு கல்லெறிந்திருக்கிறார்கள். அதன் பிறகே கட்சியனருக்கு பணம் கொடுத்திருக்கிறார்கள். 

 

 

இந்த செயல் அதிமுகவினருக்கே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. காரணம் பணத்தை கட்சிக்காரர்களை நம்பி கொடுக்காமல் உறவினர்களை வைத்தே செலவிடுகிறார் என்ற தகவலை கேள்விப்பட்ட முதல்வர் சிவபதியை போனில் கூப்பிட்டு ‘ மாப்ள சீட்டு வாங்குவது பெரிசு இல்ல... ஜெயிக்கணும் என கடுமையாக பேசிவிட்டு போன் தொடர்பை துண்டித்துவிட்டாராம். இதனால் சிவபதி அப்செட்டில் இருக்கிறராம். 

 

 

சார்ந்த செய்திகள்