கரூர் மாவட்டத்தில் இலஞ்சம் வாங்கி சிக்கும் அதிகாரிகளின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருவது அதிகாரிகள் இடையே பெரிய அதிர்ச்சியும் மக்களிடையே பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தி வருகிறது.
கடந்த மாதத்தில் 9,000 இலஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ மற்றும் இந்த மாதத்தில் 22 ஆயிரத்து, 500 ரூபாய் லஞ்சம் வாங்கிய, குளித்தலை உதவி பொறியாளரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் கரூர் வேலாயுதம்பாளையத்தை சேர்ந்தவர் காளியப்பன், குளித்தலை கடவூர் அருகே, வாழ்வார்மங்கலத்தில், வி.ஏ.ஓ.,வாக இருக்கும் போது கன்னிமார்பாளையத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி என்பவரிடம் வாரிசு சான்றிதழ், பட்டா பெயர் மாற்றம் செய்வதற்கும், 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார் . கடைசியாக 9,000 ரூபாய் தர வேண்டும் என டார்ச்சர் கொடுத்துள்ளார். இதில் அதிர்ச்சியடைந்த பொன்னுசாமி, கரூர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் கொடுத்து 9,000 ரூபாய் கொடுக்கும் போது கையும் களவுமாக பிடிப்பட்டு சிறையில் அடைக்கப்ட்டார்.
இந்த மாதம் கரூர் மாவட்டம், குளித்தலை பெரியபாலம் பரிசல் துறை சாலையில், வேளாண்மை பொறியியல் துறையின், உதவி செயற்பொறியாளராக சேலம் மாவட்டம், மேட்டூரைச் சேர்ந்த கார்த்திக், உதவிப் பொறியாளராக பணியாற்றுகிறார். விவசாயத்திற்கு தேவையான இயந்திரங்கள் மற்றும் கருவிகள், மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.
இந்நிலையில் குளித்தலை அருகே, மருதூரை அடுத்த, பணிக்கம்பட்டியை சேர்ந்தவர் விவசாயி சுரேஷ் இவர், மானிய விலையில், டிராக்டருக்கு விண்ணப்பிக்க அவரிடம், உதவி பொறியாளர் கார்த்திக், 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். கடைசியில் 22,500 ரூபாய் கொடுப்பதாக சுரேஷ் கூறினார். 'அரசாங்க மானியத்தில் வழங்கும் டிராக்டருக்கு இலஞ்சமாக 22,500 ரூபாய் கொடுக்கனுமா?' விவசாயமே மோசமாக இருக்கும் நிலையில் இலஞ்சம் கொடுக்க மனம் இல்லாமல் கரூர் இலஞ்ச ஒழிப்பு துறையில் புகார் கொடுத்தார். 05.11.2019 அன்று அலுவலத்தில் ரசாயனம் தடவிய நோட்டை உதவி பொறியாளர் கார்த்திக் வாங்கும் போது கையும் களவுமாக பிடிப்பட்டு திருச்சி சிறையில் அடைத்தனர்.