Published on 25/01/2019 | Edited on 25/01/2019

கடலூர் மாவட்டம், வடலூரில் ஒரு சமூக விரோத கும்பல் போலி மதுபானங்கள் தயாரித்து விற்பனை செய்து வருவதாக மத்திய புலனாய்வு துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதனை தொடர்ந்து வடலூர் காவல் ஆய்வாளர் அம்பேத்கர் தலைமையிலான போலிசார் மற்றும் மத்திய புலனாய்வு அதிகாரிகள் வடலூர் அடுத்த என்.எல்.சி ஆபீசர் நகரில் அமைந்துள்ள முருகேசன் தெருவில் ஒரு வீட்டில் திடிரென சோதனை செய்தனர். இதில் வீட்டில் போலி மதுபான தொழிற்சாலை நடத்தி பல்வேறு வகையான மதுபானங்கள் தயாரித்து விற்பனை செய்து வருவதை கண்டுபிடித்தனர்.
போலி மதுபானங்களை பறிமுதல் செய்ததுடன் அந்த வீட்டில் இருந்த 4 பேரை போலிசார் கைது செய்து மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.