Skip to main content

'ராஜகோபாலனை சிறையில் அடைக்க உத்தரவு'!

Published on 25/05/2021 | Edited on 25/05/2021

 

school teacher egmore mahila court judge order

 

கரோனா தொற்றின் இரண்டாம் அலை இந்தியாவில் மிகத் தீவிரமாக பரவிவருகிறது. தமிழகத்திலும் கரோனாவின் பாதிப்பு அதிகளவில் இருந்துவருகிறது. இதனால், முழுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதேவேளையில் கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலம் வகுப்புகள் எடுக்கப்படுகிறது.

 

இந்நிலையில், சென்னை கே.கே.நகரில் செயல்பட்டுவரும் பிரபல தனியார் பள்ளியான பத்மா சேஷாத்ரி பள்ளியில் பயிலும் மாணவிகள், தங்களின் ஆன்லைன் வகுப்பில் ஆசிரியர் ராஜகோபாலன் பாலியல் தொந்தரவு கொடுப்பதாக புகார்கள் அளித்துள்ளனர். 

 

இதனையடுத்து, மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் ஆசிரியர் ராஜகோபாலனை கைது செய்து வடபழனி காவல் நிலையத்தில் வைத்து அவரை விசாரித்த சென்னை அசோக் நகர் மகளிர் காவல்துறையினர், ராஜகோபாலன் மீது போக்சோ சட்டப்பிரிவு, 354ஏ (பாலியல் தொல்லை), தகவல் தொழில்நுட்பச் சட்டப்பிரிவு உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

 

அதைத் தொடர்ந்து, ராஜகோபாலன் விருகம்பாக்கத்தில் உள்ள சென்னை எழும்பூர் மகிளா நீதிமன்ற நீதிபதியின் வீட்டிற்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டு, நீதிபதி முகமது ஃபரூக் முன்பு காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். அதன் தொடர்ச்சியாக, ஜூன் 8ஆம் தேதிவரை 15 நாட்களுக்கு நீதிமன்றக் காவலில் ராஜகோபாலனை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்