இந்தியாவில் மராட்டியம், தமிழ்நாடு, குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வருகின்றது. தென் மாநிலங்களில் கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வட மாநிலங்களை விட சற்று அதிகமாக இருந்து வருகின்றது.
95 ஆயிரம் வரை சென்ற தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை, சில நாட்களுக்கு முன்பு 36 ஆயிரம் என்ற அளவிற்கு வந்ததது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை 45 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் சென்றுள்ளது. இதனால், கரோனா குறையுமா அல்லது மீண்டும் அதிகரிக்குமா என்று தெரியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி ஏ.பி சாஹிக்கு நேற்று கரோனோ உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அவரின் உடல்நிலை சீராக உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.