Skip to main content

மத்திய அரசின் கைக்கூலி இல்லை என்றால் ONGC பணியை தடுக்க வேண்டியது தானே? தினகரன் பேட்டி

Published on 15/02/2018 | Edited on 15/02/2018

 

மத்திய அரசின் கைக்கூலி இல்லை என்றால் ஓ.என்.ஜி.சி. பணியை தடுத்து நிறுத்த வேண்டியது தானே? என்று தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
 

ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ.வான டி.டி.வி.தினகரன் தஞ்சையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தபோது,

ttv Dinakaran



மத்தியிலும், மாநிலத்திலும் ஊழல் இல்லாத ஆட்சி செய்கிறோம் என்று சொல்கிறார்கள். ஆனால் எல்லா இடங்களிலும் ஊழல் நடக்கிறது. இதனால் மத்திய அரசு மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். மாநிலத்தில் அரசு இருப்பதாகவே மக்கள் நினைக்கவில்லை.
 

ஓ.என்.ஜி.சி. செயல்படுத்தும் திட்டத்தை ஜெயலலிதா கடுமையாக எதிர்த்து வந்தார். அவரது பெயரை சொல்லி ஆட்சி செய்பவர்கள், ஓ.என்.ஜி.சி. பணிக்கு தடை விதித்து இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் மத்திய அரசு செயல்படுத்தும் எந்த திட்டத்தையும் கண்டுகொள்வதில்லை.
 

jayakumar

நாங்கள் மத்திய அரசின் கைக்கூலி இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் சொல்கிறார். அப்படியென்றால் ஓ.என்.ஜி.சி. பணியை தடுத்து நிறுத்த வேண்டியது தானே?. ஓ.என்.ஜி.சி. பணியை நிறுத்த வலியுறுத்தி போராட்டம் நடத்தியவர்களை கைது செய்தது கண்டிக்கத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார். 

சார்ந்த செய்திகள்