இரு அணிகள் இணைவதன் மூலம் தமிழக மக்களுக்கு எந்த பயனுமில்லை: கனிமொழி
இரு அணிகள் இணைவதன் மூலம் தமிழக மக்களுக்கு எந்த பயனுமில்லை என திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
கோவையில் நடைபெற உள்ள மக்கள் மேடை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி விமானம் மூலம் கோவை வந்தார். அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
அதிமுக இரு அணிகள் இணைப்பு பற்றி யாராலும் பதில் கூற முடியாது எனவும், தினமும் ஒரு புது கதையை அதிமுகவினர் கூறி வருவதோடு, அதற்கான காரணத்தை வெளிப்படையாக கூறாமல் நாடகம் நடத்தி வருவதாக தெரிவித்தார்.
மேலும் இரு அணிகள் இணைவதன் மூலம் மக்களுக்கு எந்த பயனும் இல்லை எனவும், அவர்கள் நடத்தப்படுவதே இந்த இணைப்பு என குறிப்பிட்டார். மக்கள் இவர்களுக்கு வாக்கு அளிக்கவில்லை, என்றும் மக்களுக்கு விரோதமான, மக்களுக்கு பயனளிக்காத இந்த ஆட்சி தொடர்ந்து நீடிக்க வாய்ப்பு இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
- ஞானசேகரன்