21 அதிகாரிகளுக்கு ஐ.ஏ.எஸ். அந்தஸ்து: தமிழக அரசு உத்தரவு
தமிழகத்தில் அரசு பணியில் உள்ள 21 அதிகாரிகளுக்கு ஐ.ஏ.எஸ். அந்தஸ்து வழங்கி தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக அரசுத்துறை அதிகாரிகளுக்கு (மாநில சிவில் சர்வீஸ்) ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக நிலை உயர்வு அளித்து ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். ஐ.ஏ.எஸ். பணியில் ஏற்பட்டுள்ள காலி இடங்களுக்கு ஏற்ற வகையில் தமிழகத்தில் 21 அதிகாரிகளுக்கு ஐ.ஏ.எஸ். அந்தஸ்து வழங்கி அவர் ஆணையிட்டுள்ளார்.