Published on 14/12/2018 | Edited on 14/12/2018

அமமுகவில் இருந்து விலகி இன்று திமுகவில் இணைந்தார் செந்தில் பாலாஜி. இந்தநிலையில் அமமுக துணைப்பொதுச்செயலாளர் தினகரன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது தினகரன், சகோதரர் செந்தில் பாலாஜியை 2006ல் இருந்தே தெரியும். செந்தில் பாலாஜி போனதில் வருத்தமில்லை. எங்கிருந்தாலும் வாழ்க. சொந்த பிரச்சனை இருப்பதாக கூறி 4 மாதங்களுக்கு முன்பு கூறினார். அதனால் கட்சியில் ஆக்டிவாக இருக்க மாட்டேன் என்றார். கட்சியில் இருப்பதும், விலகுவதும் அவரவர் விருப்பம் என்றார்.