தமிழ்நாட்டு மக்களை காப்பாற்ற அதிமுகவால் மட்டுமே முடியும். அதனை எப்படி செய்ய வேண்டும் என்பது எனக்கு தெரியும். அதனை நடத்தி, ஜெயலலிதா இருந்தபோது எப்படி ஆட்சி நடத்தினாரோ. அதுபோல் நாங்கள் செய்வோம். நாங்கள் தான் அதிமுக. 2024 தேர்தலில் மூன்று அணிகளும் ஒன்றிணைந்து தேர்தலை சந்திக்கும்” என சசிகலா தெரிவித்துள்ளார்.
நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த சசிகலா, “இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் விதமாக புதிய நாடாளுமன்ற கட்டடம் மூன்று வருடங்களில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதனை பிரதமர் திறந்து வைக்கிறார். இதனை எதிர்க்கட்சிகள், நாட்டிற்கு பெருமை என ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால், எதிர்க்கட்சிகள் என இருக்கிறோம் என்பதை வெளியே காட்டுவதற்காக இதுபோன்ற கோரிக்கைகளை வைக்கிறார்கள்.
ஒரு கட்சி, இயக்கம் என்று இருந்தால் அதில் தொண்டர்களின் விருப்பம்தான் வெற்றி பெறும். அதனால், அதிமுக விவகாரத்தில் தொண்டர்களின் விருப்பம் என்ன என்பது விரைவில் தெரியும். அதிமுகவின் அரசியல் மாற்றம் 2024ல் தெரியும். ஓ.பி.எஸ். சந்திப்பு நடக்கலாம். அனைவரையும் ஒருங்கிணைத்து கொண்டு செல்வதுதான் என் வேலை. எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு ஜெயலலிதா, ஜானகி இருவரும் தனி அணியாக இருந்தனர். அப்போதே இந்தப் பணிகளை செய்துள்ளேன். என்னை பொறுத்தவரையில் நான் நினைத்ததை முடித்துக்கொண்டே வருகிறேன்.
தமிழ்நாட்டு மக்களை காப்பாற்ற அதிமுகவால் மட்டுமே முடியும். அதனை எப்படி செய்ய வேண்டும் என்பது எனக்கு தெரியும். அதனை நடத்தி, ஜெயலலிதா இருந்தபோது எப்படி ஆட்சி நடத்தினாரோ. அதுபோல் நாங்கள் செய்வோம். நாங்கள் தான் அதிமுக. 2024 தேர்தலில் மூன்று அணிகளும் ஒன்றிணைந்து தேர்தலை சந்திக்கும். தொண்டர்களின் ஆதரவும், பொதுமக்களின் ஆதரவும் இருந்தால் தான் ஒரு கட்சியின் தலைமை என்று சொல்ல முடியும். அதனை வருங்காலங்களில் பார்ப்பீர்கள்” என்று தெரிவித்தார்.