Published on 16/01/2021 | Edited on 16/01/2021
தமிழர் திருநாளின் இரண்டாம் நாளான நேற்று விவசாயத்திற்கு பெரிதும் உதவுகிற கால்நடைகளுக்கு நன்றி சொல்லும் விதமாக மாட்டுப்பொங்கல் கொண்டாடப்பட்டது.
பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்கள் வீடுகளில் பொங்கல் வைத்து கொண்டாடிவரும் நிலையில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் உளுந்தை கிராமத்தில் உள்ள தனது பண்ணை வீட்டில், குடும்பத்துடன் மாட்டுப்பொங்கலை கொண்டாடினார்.