![Case registered against Annamalai; BJP protest](http://image.nakkheeran.in/cdn/farfuture/azpSbin3jzHyPBUP_8LsLyVd9kWyQpFmuaaBUQEhvY8/1678460633/sites/default/files/2023-03/12.jpg)
![Case registered against Annamalai; BJP protest](http://image.nakkheeran.in/cdn/farfuture/SfSNcxwyZq4_oXQJCMK4z1LfL2j0PdC6dh2hAJhHOTY/1678460633/sites/default/files/2023-03/13_0.jpg)
![Case registered against Annamalai; BJP protest](http://image.nakkheeran.in/cdn/farfuture/p8QRo2CdRuJx9Zis88G78-LN2dZe5GpHyP4uQuoFi2k/1678460633/sites/default/files/2023-03/14_1.jpg)
![Case registered against Annamalai; BJP protest](http://image.nakkheeran.in/cdn/farfuture/MwHt13ii2Ge60N4Eryi-oo3E3BwrpOwZa2MjhorDczk/1678460633/sites/default/files/2023-03/15_1.jpg)
![Case registered against Annamalai; BJP protest](http://image.nakkheeran.in/cdn/farfuture/38XUlyVHuwvW9HX7ru_dO-5dLDTY22D_Gg4asEwczBA/1678460633/sites/default/files/2023-03/17_1.jpg)
![Case registered against Annamalai; BJP protest](http://image.nakkheeran.in/cdn/farfuture/ZgD9tW6XQeNQo9S3X0HLYHv-CWlUjGH5ZQaYbfsRSfk/1678460633/sites/default/files/2023-03/16_1.jpg)
Published on 10/03/2023 | Edited on 10/03/2023
திருப்பூரில் வட மாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக வெளியான தகவல்கள் தொடர்பான விவகாரத்தில் வதந்தி பரப்பியவர் மீது பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது, சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்புவது உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் அண்ணாமலை மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதை கண்டித்து தமிழக பாஜக சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன், தேசிய மகளிர் ஆணைய சிறப்பு உறுப்பினர் குஷ்பூ மற்றும் பாஜக மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் தமிழக பாஜக துணைத்தலைவர், தேசிய மகளிர் ஆணைய சிறப்பு உறுப்பினர் குஷ்பூ ஆகியோர் உரையாடினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.