கரோனா வைரஸ் உலக அளவில் பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியாவில் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் சிலர் கரோனா தாக்கம் புரியாமல் இருசக்கர வாகனங்களில், சாலைகளில் வலம் வந்து கொண்டிருக்கின்றனர். இதன் காரணமாக இந்த நோய் வேகமாக பரவி வருகிறது.
![admk](http://image.nakkheeran.in/cdn/farfuture/RaGUFr2tXY_LDCwYcvVH4eDIaA6-L4amGn6xOL1s7AM/1585657161/sites/default/files/inline-images/823_1.jpg)
இந்த நிலையில், சென்னை ரிப்பன் மாளிகையில் கரோனா தடுப்பு ஆலோசனைக் கூட்டம் இன்று நடந்தது. இதில் மீன்வள மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்றார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது, "வெளிமாநிலங்களில் இருந்து வந்து தங்கி பணியாற்றுபவர்களை யாராவது விரட்டினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சூப்பர் மார்க்கெட், மளிகைக் கடைகளில் பொருட்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் வியாபரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஊரடங்கை கடைப்பிடிக்காதவர்கள் சமுதாயத்திற்கு எதிரானவர்கள். இப்படி தேவையின்றி சாலைகளில் சுற்றித் திரிந்தால் 14 நாட்கள் கட்டாயம் தனிமை சிறையில் வைக்கப்படுவார்கள்" என்று கூறினார்.