Published on 04/02/2022 | Edited on 04/02/2022
வரும் ஜூன் மாதம் 30- ஆம் தேதி வரை எண்ணெய், எண்ணெய் வித்துக்களை இருப்பு வைக்க கட்டுப்பாடு விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சில்லறை விற்பனையாளர்கள் 100 குவிண்டால் வரை எண்ணெய் வித்துக்களை இருப்பு வைத்துக் கொள்ளலாம். மொத்த விற்பனையாளர்கள் 2,000 குவிண்டால் வரை எண்ணெய் வித்துக்களை இருப்பு வைத்துக் கொள்ளலாம்.
அதேபோல், சமையல் எண்ணெய்யை சில்லறை விற்பனையாளர்கள் 30 குவிண்டால் வரையும், மொத்த விற்பனையாளர்கள் 500 குவிண்டால் வரையும் இருப்பு வைத்துக் கொள்ளலாம். சமையல் எண்ணெய் உற்பத்தியாளர்கள் தினசரி உற்பத்தி அடிப்படையில் 90 நாள் உற்பத்தியை இருப்பில் வைத்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமையல் எண்ணெய் விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.