Skip to main content

குடியுரிமை சட்டத்தை அமல்படுத்தாத மாநிலங்களில் 356 பாயும்! - பாஜக எம்.பி தகவல்!

Published on 04/01/2020 | Edited on 06/01/2020


நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு இரண்டு அவைகளிலும் சில வாரங்களுக்கு முன்பு நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்றத்தில் புயலை கிளப்பிய இந்த பிரச்சனையில் எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, இந்த மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.  இதுதொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், இந்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது.



இந்நிலையில் குடியுரிமை சட்டத்தை அமல்படுத்தாத மாநிலங்கள் கடும் விளைவை சந்திக்கும் என்று பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் உதய் பிரதாப் சிங் பேசும் போது, நாட்டில் குடியுரிமை சட்டத்தை  செயல்படுத்தாத மாநிலங்களை, மத்திய அரசு 356 விதியை பயன்படுத்தி கலைக்கும் என்று கூறியுள்ளார். அவரின் இந்த பேச்சு தற்போது கடும் எதிர்ப்பை சந்தித்து வருகின்றது. 

 

சார்ந்த செய்திகள்