Skip to main content

கலாம் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம்பெற்றுள்ள மூன்று வயது சிறுவன்!

Published on 03/08/2021 | Edited on 03/08/2021

 

Three year old boy in Kalam Book of Records

 

புதுச்சேரி மேட்டுப்பாளையம் சண்முகாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டாலின். பள்ளி ஆசிரியரான இவரது மனைவி லட்சுமி நாராயணி, தனியார் பள்ளி ஆசிரியராக பணியாற்றிவருகிறார். இவர்களது மகன் யாஸ்வினுக்கு தற்போது 3 வயது 2 மாதம் ஆகிறது. சிறுவன் யாஸ்வின், 2 வயது முதல் அதிக ஞாபக சக்தியுடன் விளங்கியதால் பெற்றோர்கள் அவருக்குப் பல்வேறு படங்களைக் காட்டி ஞாபக சக்தியை சோதித்துவந்துள்ளனர்.

 

இந்நிலையில், கலாம் புக் ஆஃப் ரெகார்டில் தற்போது 'அதிகளவு ஞாபக சக்தி கொண்ட மாணவன்' என்கிற சாதனையை அவர் படைத்துள்ளார். குறிப்பாக அவர் 250 அட்டைகளைக் காண்பித்தால் அதன் பெயரை டக் டக் என்று சொல்லும் திறன் படைத்துள்ளார். குறிப்பாக உலக நாடுகளின் தேசிய கொடிகளைக் காண்பித்தால் அதன் தலைநகரம், விலங்குகளின் பெயர்கள், பறவைகளின் பெயர்கள், தேசியத் தலைவர்களின் பெயர்கள், மலர்களின் பெயர்கள், மரங்களின் பெயர்கள் என 250க்கும் மேற்பட்ட பெயர்களைத் தெரிவித்து சாதனை படைத்ததுள்ளானர். இவரது சாதனையைப் பாராட்டி பல்வேறு சமூகசேவை அமைப்பினர் பொன்னாடை அணிவித்தும், அன்பளிப்புகள் வழங்கியும் கௌரவித்துவருகின்றனர்.  

 

 

சார்ந்த செய்திகள்