Published on 25/09/2018 | Edited on 25/09/2018

கடந்த 2011ஆம் ஆண்டில் எம்பி, எம்எல்ஏக்களுக்கு எதிராக குற்ற வழக்கு தொடுக்கப்பட்டுவிட்டால் அவர்களை தகுதி நீக்கம் செய்து, தேர்தலில் போட்டியிட கூடாது என்று பல தனி நபர்கள், அமைப்புகள் இந்த வழக்கை தொடுத்தது. தற்போது இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இன்று காலை தீர்ப்பு வழங்கி உள்ளது.
அதில், எம்பி, எம் எல் ஏக்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தாலே அவர்களை தேர்தலில் போட்டியிட தடை விதிக்க முடியாது என்று தீர்ப்பு வழங்கியுள்ளது.