Skip to main content

மதிப்பெண் குறைவாக எடுத்த மாணவிகளின் ஆடைகளைக் கழற்றிய ஆசிரியை!

Published on 03/08/2017 | Edited on 03/08/2017
மதிப்பெண் குறைவாக எடுத்த மாணவிகளின் ஆடைகளைக் கழற்றிய ஆசிரியை!

உத்தரகாண்ட் மாநிலம் ரூர்க்கி பகுதியில் தனியார் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு ஆறாம் வகுப்பு படிக்கும் இரண்டு மாணவிகள் ஆங்கிலப்பாடத்தில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். இதற்கு தண்டனையாக வகுப்பில் உள்ள மாணவர்கள் அனைவரின் மத்தியில் ஆடைகளைக் கழற்றி நிற்கச் செய்துள்ளார் ஆசிரியை ஒருவர்.

இதனால் மனமுடைந்த மாணவிகள் பெற்றோரிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளனர். ஆத்திரமடைந்த மாணவிகளின் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதையடுத்து பள்ளிக்கு வந்த காவல்துறையினர் சம்பந்தப்பட்ட ஆசிரியையைக் கைதுசெய்து, பெண்களை பொது இடத்தில் அவமானப்படுத்திய குற்றத்திற்கான சட்டம் 509-ன் கீழ் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து மாவட்ட பள்ளி கல்வித்துறை, ஆசிரியையின் இந்த செயல் கண்டிக்கத்தக்கது. சம்பந்தப்பட்ட ஆசிரியை பள்ளியை விட்டு நீக்கப்படுவார். மேலும், பள்ளியில் மாணவர்களோடு ஆசிரியர்கள் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பதற்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என தெரிவித்துள்ளது.

மாணவர்களின் பெற்றோர் பள்ளியில் சிசிடிவி கேமராக்களை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

- ச.ப.மதிவாணன்

சார்ந்த செய்திகள்