Published on 15/05/2022 | Edited on 15/05/2022

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வதற்காக, வரும் மே 26- ஆம் தேதி அன்று தமிழகம் வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி.
வரும் மே 26- ஆம் தேதி அன்று சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பாக, நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரதமர் நரேந்திர மோடி, மதுரை முதல் தேனி வரையிலான அகல ரயில் பாதை திட்டத்தைத் திறந்து வைக்கவுள்ளார்.
அதேபோல், சென்னை- மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம், சென்னை- பெங்களூரு அதிவிரைவுச் சாலை திட்டம் உள்ளிட்டவைகளுக்கு பிரதமர் அடிக்கல் நாட்ட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பின்னர், பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்துப் பேசவிருப்பதாகவும், அப்போது இலங்கை தமிழர் விவகாரம், தமிழ்நாட்டின் நலன் சார்ந்த கோரிக்கைகளை முன் வைக்க உள்ளதாக தகவல் கூறுகின்றன.