Skip to main content

17 மாதங்களில் இல்லாத அளவுக்கு புதிய உச்சம்தொட்ட விலைவாசி உயர்வு!

Published on 13/04/2022 | Edited on 13/04/2022

 

Price peaks at 17 months!

 

நாட்டின் சில்லறை விலை பணவீக்கம் 17 மாதங்களில் இல்லாத அளவு அதிகரித்துள்ளது. 

 

கடந்த மார்ச் மாதத்திற்கான விலைவாசி புள்ளி விவரங்களை மத்திய புள்ளியியல் அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதன்படி, மார்ச்சில் சில்லறை விலை பணவீக்கம் 6.95% ஆக அதிகரித்துள்ளது. இது கடந்த 17 மாதங்களில் இல்லாத உயர்ந்த அளவாகும். சமையல் எண்ணெய் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை கடுமையாக அதிகரித்ததே பணவீக்க அதிகரிப்பிற்கு முக்கிய காரணமாக, கூறப்படுகிறது. 

 

பணவீக்கம் சமையல் எண்ணெய் பிரிவில் 18.8% ஆகவும், காய்கறிகள் பிரிவில் 11.6% ஆகவும் இருந்தது. இறைச்சி மற்றும் காய்கறிகள் பிரிவில் பணவீக்கம் 9.6% ஆகவும், உடைகள் மற்றும் காலணிகள் பிரிவில் 9.4% ஆகவும் இருந்தது. மேலும், போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு பிரிவில் பணவீக்கம் 8% ஆகவும், சுகாதாரப் பிரிவில் 7% ஆகவும் உயர்ந்துள்ளது. 

 

கிராமப் புறங்களில் சில்லறை விலை பணவீக்கம் 7.7% ஆக இருந்த நிலையில், நகர்ப்புறங்களில் அது 6.1% மட்டுமே இருந்ததாக அரசு தெரிவித்துள்ளது. பணவீக்கம் வெகுவாக அதிகரித்துள்ளதால், நிலைமையைச் சமாளிக்க வங்கிக் கடன் வட்டி விகிதங்களை ரிசர்வ் வங்கி உயர்த்தும் எனத் தெரிகிறது.

 

சார்ந்த செய்திகள்