சத்தீஸ்கரில் மீண்டும் ஒரு கோரக்பூர்!: மருத்துவமனை நிர்வாகம் மறுப்பு!!
கடந்த சில தினங்களுக்கு முன்னர், உத்தரப்பிரதேசம் மாநிலம் கோரக்பூரில் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் குறைபாட்டால் 70-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள அம்பேத்கர் அரசு மருத்துவமனையில் மூன்று குழந்தைகள் இறந்ததற்குக் காரணம் ஆக்ஸிஜன் சிலிண்டர்களில் ஏற்பட்ட குளறுபடிதான் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து, ஆங்கிய செய்தி ஊடகம் ஒன்றின் செய்திக்குறிப்பில், ஞாயிற்றுக்கிழமை இரவு சில நோயாளிகள் மூச்சுவிடுவதற்கு கடினமாக இருப்பதாக மருத்துவமனை ஊழியர்களிடம் தெரிவித்துள்ளனர். இந்த நிலை தொடர்ச்சியாக 20 நிமிடங்களுக்கு நீடித்துள்ளது. பின்னர் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் கட்டுப்பாட்டு அறையில் ஏற்பட்ட குறைபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டு, அதன் மேற்பார்வையாளர் ரவிச்சந்திரா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இது தவறான தகவல் என அம்பேத்கர் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- ச.ப.மதிவாணன்