Skip to main content

இந்தியா-சீனா எல்லை விவகாரத்தில் விரைவில் நல்ல முடிவு!: ராஜ்நாத் சிங்

Published on 21/08/2017 | Edited on 21/08/2017
இந்தியா-சீனா எல்லை விவகாரத்தில் விரைவில் நல்ல முடிவு!: ராஜ்நாத் சிங்

இந்தியா சீனா இடையே ஏற்பட்டுள்ள எல்லைப் பிரச்சனையில், விரைவில் நல்ல தீர்வு எட்டப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதியளித்துள்ளார்.



இந்தோ-திபெத்தியன் எல்லைக்காவல் பிரிவின் சார்பில் நடத்தப்பட்ட கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய ராஜ்நாத் சிங், ‘இந்தியா சீனா இடையேயான எல்லைப் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு எட்டப்படும். இந்த விவகாரத்தில் சீனா நல்ல முடிவு எடுக்கும் என எதிர்பார்க்கிறோம்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், ‘இந்தியா தனது அண்டைநாடுகளிடம் இருந்து அமைதியையே எதிர்பார்க்கிறது. அதேசமயம், நாட்டின் பாதுகாப்பிற்கு பிரச்சனை வந்தால் அதை எதிர்கொள்ளும் வலிமை நம் பாதுகாப்புப் படையினருக்கு இருக்கிறது. குறிப்பாக எல்லைப்பகுதிகளில் நம் பாதுகாப்புப் படையினரின் பங்கு அளப்பரியது’ எனவும் பேசியுள்ளார்.

முன்னதாக சிக்கிம் பகுதியில் உள்ள தோக்லாமில், சீனப்படையினர் சாலை அமைக்க முயன்றபோது, இந்தியப் படைவீரர்கள் தடுத்தனர். இதையடுத்து இரு பிரிவினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இந்த விவகாரம் இரு நாடுகளுக்கும் இடையே போர் ஏற்படுவதற்கான வாய்ப்பாக இருக்கும் என இருநாடுகளிலும் பரபரப்பாக பேசப்பட்டது. இன்னமும் இந்த விவகாரத்தில் நல்ல முடிவு எட்டப்படாத நிலையில், ராஜ்நாத் சிங்கின் உரை முக்கியத்துவம் வாய்ந்தது.

- ச.ப.மதிவாணன்

சார்ந்த செய்திகள்