![head master with teachers videos goes viral](http://image.nakkheeran.in/cdn/farfuture/E6KGz685mmlksfnXqhmrW40n6rhwaaNis441L4WiOto/1671441020/sites/default/files/inline-images/995_172.jpg)
பள்ளி அறையில் தலைமை ஆசிரியர் கணினி ஆப்ரேட்டருடன் தனிமையில் இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம், மசூலிப்பட்டணம் அருகே அரசு உருது சிறுபான்மையினர் உண்டு உறைவிட பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. ஏராளமான மாணவர்கள் தங்கி படித்து வரும் இப்பள்ளியில் ஆனந்த் பாபு தலைமை ஆசிரியாராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில், தலைமை ஆசிரியர் ஆனந்த் பாபு பள்ளி விடுதி அறையில் இரவு நேரங்களில் கணினி ஆப்ரேட்டருடன் தனிமையில் இருந்துள்ளார். இதனை பார்த்த மாணவர்கள், தங்களது செல்போனியில் வீடியோ எடுத்து மற்ற மாணவர்களுக்கு பகிர்ந்துள்ளனர். அந்தோடு இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. இதனையறிந்த தலைமை ஆசிரியர் ஆனந்த் பாபு வீடியோ எடுத்த மாணவர்களை கடுமையாக தாக்கியுள்ளார். இதனிடையே தலைமை ஆசிரியரின் வீடியோ வைரலானதை தொடர்ந்து, போலீசார் ஆனந்த் பாபுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.