கோரக்பூர் மருத்துவமனை நிர்வாகத்தினர் மீது குற்றவியல் வழக்கு!
கோரக்பூர் அரசு மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் 10, 11 தேதிகளில் குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில், மருத்துவமனை நிர்வாகத்தினர் மற்றும் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை நிறுத்தி வைத்த புஷ்பா சேல்ஸ் நிறுவனத்தின் மீதும் குற்றவியல் வழக்கு பதிய முதல்வர் யோகி தரப்பில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க நான்கு பேர் கொண்ட குழுவை யோகி தரப்பில் அமைக்கப்பட்டது. இந்தக்குழு வெளியிட்ட அறிக்கையின் படி, தற்போது நான்கு பேரின் மீது குற்றவியல் வழக்கு பதிய மாநில அரசு பரிந்துரை செய்துள்ளது.
இந்த வழக்கு பிஆர்டி மருத்துவமனையின் தலைவர் ராஜீவ் சர்மா, மருத்துவர்கள் ராஜேஷ் மற்றும் கஃபீல் கான், புஷ்பா சேல்ஸ் நிறுவனம் உள்ளிட்டோர் இந்த வழக்கை எதிர்கொள்வர்.
இருந்தபோதிலும், ‘கோரக்பூர் நிகழ்வு’ என்ற பெயர் மட்டுமே இந்த அறிக்கைக்கு வைக்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் மரணத்திற்கான குறிப்பிட்ட காரணம் பற்றி எதுவும் அறிக்கையில் குறிப்பிடவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ச.ப.மதிவாணன்