பீகார் மாநிலம், பாட்னாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி ஹர்ஜுட் என்பவரிடம், மாணவி ஒருவர் அரசு சார்பில் குறைந்த விலையில் சானிடரி நாப்கின் வழங்குவீர்களா? என்று கேள்வி எழுப்பினார்.
அப்போது, கோவப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி சானிடரி நாப்கின், அதைத் தொடர்ந்து ஜீன்ஸ் பேண்ட், பின்னர் ஆணுறை கேட்பீர்களா? என்று அநாகரிகமாக பேசியுள்ளார். இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ள தேசிய மகளிர் ஆணையம், ஏழு நாட்களுக்குள் விளக்கம் அளிக்க பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார், "உடனடியாக ஒரு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளேன். பெண்களுக்கு அதிகாரம் அளிக்க நாங்கள் உதவுகிறோம். ஒவ்வொன்றையும் கண்காணித்து வருகிறேன். நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.