



Published on 21/05/2023 | Edited on 21/05/2023
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 32ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. டெல்லியில் உள்ள வீர் பூமி நினைவிடத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் காங்கிரஸார் மலர் அஞ்சலி செலுத்தினர். ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட மே 21ஆம் தேதி பயங்கரவாத எதிர்ப்பு தினமாக நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.