கடந்த சில வாரங்களுக்கு முன்பு குஜராத்தில் ராஜ்கோட் பகுதியில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் தொடர்ச்சியாக உயிரிழந்தன. இதற்கான காரணங்கள் குறித்து சிறப்பு குழுக்களை அமைத்து அம்மாநில அரசு ஆய்வு மேற்கொண்டு வருகின்றது. இது ஒருபுறம் சென்று கொண்டிருக்க கடந்த வாரம் அகமதாபாத்தில் 90க்கும் மேற்பட்ட குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்தன. இதே போன்று ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பிபிஎம் மருத்துவமனையில் 120க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தன.
என்ன காரணத்துக்காக குழந்தைகள் உயிரிழக்கிறார்கள் என்று மருத்துவர்கள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வரும் நிலையில், ஊட்டச்சத்து இன்மை, போதுமான அளவு சத்துக்குறைவு, குறைபிரசவம் முதலிய காரணங்களால் இந்த உயிரிழப்புக்கள் ஏற்படுவதாக தற்போது தெரியந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். ஒரே மாதத்தில் 300க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் வட மாநிலங்களை உலுக்கி வருகிறது.