Published on 20/04/2019 | Edited on 20/04/2019
மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் நடைபெறுகிறது. இதனால் ஒவ்வொரு கட்சியினரும் ஒவ்வொருவரை விமர்சித்து பிரச்சாரங்களை தொடங்கிவிட்டனர். யாரும் நல்ல விஷயங்கலை சொல்லி விமர்சனம் செய்கிறார்களா என்பது தெரியவில்லை. ஆனால், கடுமையான சொற்களால் விமர்சித்து வருவது மட்டும் கட்சிகளில் கடைபிடிக்கப்படுகிறது.
குஜராத்தை சேர்ந்த பாஜக அமைச்சர் கனபத் வசாவா ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் பேசுகையில், “நரேந்திர மோடியை பார்க்கும்போது குஜராத்தின் சிங்கம் போல இருக்கிறார். ஆனால், ராகுல் காந்தியை பார்க்கும்போது நாய்க்குட்டியை போல வாலை ஆட்டிக்கொண்டிருக்கிறார். பாகிஸ்தான் அவருக்கு ரொட்டி கொடுத்தால், அங்கு செல்வார். அதேபோல சீனா ரொட்டி கொடுத்தாலும் அங்கேயும் செல்வார்” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.