Skip to main content

சட்டம்- ஒழுங்கை காக்க நடவடிக்கை எடுங்கள்!- மத்திய உள்துறை அமைச்சகம் சுற்றறிக்கை!

Published on 16/12/2019 | Edited on 16/12/2019

மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், சட்டம்- ஒழுங்கு, பொது அமைதியை காக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். வன்முறையை தூண்டும் விதமாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் வதந்திகளை கண்காணிக்க வேண்டும். வன்முறையை கட்டுப்படுத்தவும், மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றறிக்கையில் மத்திய உள்துறை குறிப்பிட்டுள்ளது. 

citizenship amendment bill 2019 union home minister circular issued state governments


குடியுரிமை சட்டத்திற்கு எதிராக டெல்லி, மேற்கு வங்கம், கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே டெல்லி இந்தியா கேட் முன் காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி, அகமது பட்டேல், கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட தலைவர்கள்  தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 


 

சார்ந்த செய்திகள்