Skip to main content

"விருந்து உண்ட மாப்பிள்ளை பொன்மாணிக்கவேல்..." - திலகவதி ஐபிஎஸ்

Published on 06/08/2018 | Edited on 06/08/2018

சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி பொன்மாணிக்கவேல், விசாரித்து வந்த வழக்குகள் தமிழக அரசால் சி.பி.ஐக்கு மாற்றப்பட்டன. 'பொன்மாணிக்கவேலின் விசாரணை திருப்தியளிக்கவில்லையென்றும், அவரது விசாரணை திசைமாறிப் போவதாகவும் காரணம் கூறினார்கள் அமைச்சர்கள். மறுபக்கம், 'கடத்தப்பட்ட சிலைகள் விறுவிறுப்பாக மீட்கப்பட்டு, கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டு வந்த நிலையில் யாரையோ காப்பாற்றவே அரசு இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறது' என்று பொன்மாணிக்கவேலுக்கு ஆதரவாக அரசுக்கு எதிராக விமர்சனங்கள் கிளம்பின. இந்த நிலையில், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரியும், தமிழக சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவில் தலைமைப் பதவியில் பணியாற்றியவருமான திலகவதியை சந்தித்து இதுகுறித்துப் பேசினோம். பொன்மாணிக்கவேல் நீக்கம் குறித்தும், தமிழக சிலைக் கடத்தல் பிரிவின் செயல்பாடு குறித்தும் அவர் கூறியது...  

 

thilagavahi

         

"பொன்மாணிக்கவேல், எனது டீமில் முன்பு பணிபுரிந்திருக்கிறார். வேலை என்று வந்துவிட்டால் திறம்படத்தான் செயல்படுவார், நல்ல மனிதரும்கூட ஆனால் அதிகமாகப் பேசுபவர். அதன் மூலம் ஊடகங்கள் முன் தன்னை அடையாளப்படுத்திக்கொள்கிறார். அதே போல் இதையெல்லாம் தனிப்பட்ட ஒருவரால் செய்யமுடியாது. ஒரு குழுவாகத்தான் இதை செயல்படுத்த முடியும், உதாரணத்துக்கு பத்தூர் நடராஜன் சிலை வழக்கை எடுத்துக்கொண்டால் 'ஸ்காட்லண்ட் போலீஸ், அமெரிக்கா போலீஸ், இந்திய போலீஸ், தமிழ்நாடு போலீஸ் மற்றும் அந்த மியூஸியத்தின் இயக்குனர்' என்று இத்தனை பேரின் உழைப்பால் கண்டுபிடிக்கப்பட்டது. இதையெல்லாம் தாண்டி 'டாக்டர். சந்திரசேகர்' என்னும் தடயவியல் நிபுணர் வந்து பிடிபட்ட சிலை பத்தூரில் தொலைந்த சிலைதான் என்று நிரூபித்தார். இப்படி ஒரு சிலை மீட்பதின் பின்னால், இத்தனை நபர்களின் உழைப்பு இருக்கிறது. இது வெறும் ஒரு தனி மனிதரால் முடியாது. பொன்மாணிக்கவேலை  பொறுத்தவரை, நான் முன்னமே சொன்னது போல அவர் நன்றாகப் பேசக்கூடியவர், அதனால் ஊடகங்களின் முன் அதிகம் பேசுகிறார். அதற்கு ஊடகங்களும் துணைபோகிறது என்பதுதான் வருத்தத்திற்குரியது. பொன்மணிக்கவேலைப் போல பல திறமையான அதிகாரிகள் இருக்கின்றனர். அவர் இல்லையென்றால் அந்தப் பிரிவு ஒன்றும் முடங்கிவிடாது. அவர் செய்திருக்கும் வேலையென்பது பலர் சமைத்துவைக்க இறுதியில் விருந்து உண்ட மாப்பிள்ளை போலதான். இப்பொழுது கைது செய்யப்பட்டுள்ள முக்கிய குற்றவாளியான சுபாஷ் கபூர் கைது செய்யப்ட்டதுகூட விபத்துதான்.  

 

அரசு, இந்த வழக்குகளை சிபிஐக்கு மாற்றியிருப்பதில் அரசியலொன்றும் இல்லை. எல்லாவற்றையும் அரசியல் ஆக்கக்கூடாது. சிலைக்கடத்தலைத் தடுப்பதற்கு அரசும் ஒத்துழைப்பு அளித்தே வருகிறது. ஆனாலும், ஆட்கள் எண்ணிக்கை, உபகரணங்கள் வசதி இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டால், இந்தப் பிரிவு அரசாங்கத்தால் கைவிடப்பட்ட பிரிவு என்றுதான் சொல்லவேண்டும். ஆனாலும் தமிழகத்திலிருந்து கடத்திக் கொண்டு செல்லப்பட்ட கலைச்செல்வங்கள் கண்டிப்பாக மீட்கப்பட வேண்டும். அது நடக்கும், ஏனெனில் முக்கிய குற்றவாளி இப்பொழுது நம் கையில் இருக்கிறான். அவன் மீதான குற்றச்சாட்டுக்கு வலுவான ஆதாரங்கள் இருக்கின்றன. அவனை வைத்து உலக அளவில் உள்ள நெட்ஒர்க்கை கண்டுபிடிக்கவேண்டும், அதுதான் பாக்கி"      

 

Next Story

பெண்களை குறி வைத்து கொன்ற சயனைட் மல்லிகா - திலகவதி ஐபிஎஸ் பகிரும் தடயம்: 52

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
thilagavathi ips rtd thadayam 52

பெண்களை ஏமாற்றி சடலங்களை குவித்த ‘சைனைட் மல்லிகா’ வழக்கு குறித்து தமிழ்நாடு காவல்துறையின் முதல் பெண் இயக்குநர், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி விளக்குகிறார்.

அடுத்ததாக ஆறு வருடங்கள் கழித்து திட்டமிட்டு குறையோடு வரும் பெண்கள் அதிகமாக சேருமிடமான மருத்துவமனை, கோவில்கள் என்று குறிவைத்து தன் கொலைகளை செய்கிறாள். இப்படியாக கெம்பம்மா மேலும் 50 வயதான சாத்தனூரைச் சேர்ந்த எலிசபெத்  தன் பேத்தியைக் கண்டுபிடிக்க வர அவளை கோவில் வளாக அறைக்கு அழைத்துச் சென்று பலகாரத்தில் சைனைட் கலந்து குடுத்து கொல்கிறாள். மருத்துவமனையில் சந்தித்த 60 வயதான யசோதாம்மா சித்தகங்கா மடத்தில் கொல்லப்பட்டார். இப்படிதான் முனியம்மா என்பவர் யடியூர் சித்தாலங்கேஷ்வர் கோயிலில் 15.12.2007 அன்று கொல்லப்பட்டார். 60 வயதான பில்லாமா, ஹெப்பல் கோவிலுக்கு ஒரு புதிய வளைவை நிறுவ ஆசைப்பட்டதை அறிந்து அவருக்கு நிதியுதவி செய்வதாக கெம்பம்மா உறுதி அளித்து, அவரையும் தன் வழக்கமான முறையில் மத்தூர் வியாத்யநாதபுரத்தில் கொல்கிறாள். ஒரு 30 வயதுடைய பெண் தனக்கு ஆண் குழந்தை இல்லாததால் வேண்ட அவளையும் தன் இரையாக்கி கொல்கிறாள்

இப்படி நிறைய கொலைகள் ஆங்காங்கு ஆதாரமில்லாமல் நிறைய பிணங்கள் கிடைக்கின்றன. மேலும் 2006ல் ரேணுகா என்ற பெண் காணாமல் போய் சடலம் கிடைக்கிறது. கெம்பம்மா சமையற்காரராக வேலை செய்த இடத்தில் மணியும் வேலை செய்து வந்தார். கெம்பம்மா மணியின் சகோதரி ரேணுகாவுடன் பேசி பழகி அவளுக்கு ஆண் குழந்தை வேண்டும் என்ற குறை இருப்பதை தெரிந்து கொண்டு கெம்பம்மா கோலார் மாவட்டத்தில் உள்ள ஒரு யாத்ரீக மையத்தில் சிறப்பு வழிபாடு நடத்தினால் தனக்கு ஆண் குழந்தை பிறக்கும் என்று சொல்கிறாள். அதேபோல வரவழைத்து போலி பூஜை நடத்தி கொன்று விடுகிறாள்.  அப்போது   வேலைக்கு சென்றிருந்த ரேணுகாவின் கணவர் துபாயில் இருந்து வருகிறார். ஏற்கெனவே பிரபலமான முறையில் நிறைய கோவில் தொடர்பான கொலைகள் நிறைய பார்த்ததால் கணவர் போலீசில் புகார் அளிக்கிறார். ஏற்கெனவே நிறைய புகார்கள் இதுபோல பதிந்ததால் இந்த கொலையும் சேர்த்து மொத்தம் எட்டு கொலைகள் கெம்பம்மா  மீது பதியப்படுகிறது.

கோர்ட் விசாரணையின் போது திறமையான வக்கீலின்  வாதாடலால் எலிசபெத் வழக்கில் கிடைத்த எல்லா பத்து சாட்சியையும் உறுதியாக இல்லை என்று கெம்பம்மாவை அதிலிருந்து விலக்குகிறார். ஆனால் நாகவேணி கொலையின் போது மட்டும் அறை ரிஜிஸ்டர் செய்யும்போது ஒரே கையெழுத்தினால் தொடர்புபடுத்தி அதில் மாட்டி கொள்கிறார். இதில் முனியம்மா வழக்கின் மீது கிடைத்த ஆதாரம்  வைத்து அது மட்டும் முக்கிய வழக்காக கருதப்படுகிறது.

ஆனாலும் அந்த வழக்கில் கெம்பம்மா பக்கமுள்ள வக்கீல் போலீசாரிடம் இவர் தான் குற்றவாளி என்றால் பேருந்து நிலையத்தில் இவரை பிடித்த போதே அங்கிருந்த ஐந்து சாட்சியங்களை வைத்து அப்பொழுதே அவரிடம் கைப்பற்றப்பட்டதை வழக்கு பதிவு செய்திருக்கலாமே. ஆனால் அப்படி செய்யாமல் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று அதிகாரிகள் தான் சைனைட் கொப்பி வாங்கி, போலி சாவி, ரசீது என்று எல்லாவற்றையும் வாங்கி நீங்கள் செட் செய்திருக்கிறீர்கள் என்று மாத்தி விடுகிறார். அப்படி செய்தும் சாட்சியத்தின் போது அடகு கடை ரசீது வைத்து அந்த கடையின் உரிமையாளரை அழைத்து சாட்சியாக விசாரிக்கிறார்கள். அவரும் இந்த அம்மா காட்டி கொடுத்து அவர் வைத்த நகைகளையும் சொல்லி விடுகிறார். மேலும் அவருக்கு தான் தான் ரூம் அளித்தேன் என்று அந்த கோயில் வளாகத்தில் சாவி கொடுத்தவரும் சாட்சி சொல்லிவிடுகிறார். இப்படியாக கிடைத்த ஆதாரத்தை வைத்து இந்தியாவில் முதல் முறையாக மரண தண்டனை பெற்ற முதல் பெண் குற்றவாளியாகிறார் சயனைடு மல்லிகா. மொத்தம் எட்டு வழக்கில் எலிசபெத் கேஸ் தவிர பாக்கி ஏழு வழக்குகளில் இரண்டு வழக்குகள் தூக்கு தண்டனையாக கொடுக்கப்பட்டு மீதம் ஆயுள் தண்டனையாக கொடுக்கப்பட்டு பின்னர் எல்லா வழக்குகளுக்கும் சேர்த்து ஆயுள் தண்டனை கொடுத்து விட்டனர்.

இத்தனை கொலைகளுக்கும் இருக்கும் அந்த பெண்ணின் ஒரே பின்னணி தன் வறுமையின் காரணமாக செய்ததுதான். முதலில் ஆறு வருடங்கள் செய்யாமல் இருந்தாலும் தன் பெண்களை வேற இடத்தில் திருமணம் செய்துகொடுத்த பின்னர் டாக்ஸி டிரைவராக இருக்கும் தன் மகனுக்கு சொந்தமாக ஒரு டாக்ஸி வாங்கி கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் 2006ல் இருந்து இத்தனை கொலைகள் அவர் செய்து இருக்கிறார்.  எனவே பொதுமக்கள் அறிமுகம் இல்லாத நபர்களிடம் தன் குறைகளை கூறுவது தன் அந்தரங்க விஷயங்களை பகிர்வது என்பதை தவிர்க்க வேண்டும். மேலும் தன் குடும்ப உறுப்பினர்களுக்கு கூட தெரியாமல் அவர்களை அனுப்பிவிட்டு வேறு ஒரு நபரை தன் வீட்டிற்குள் அனுமதித்து அவர் சொல்வது போல செய்தால், இது போல தான் உயிர் போகும். அசம்பாவிதம் நடக்கும். எவ்வளவு மன உருக பேசினாலும் சுய பாதுகாப்பை மக்கள் தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

Next Story

காவல்துறைக்கு சவாலாக அமைந்த சயனைடு மல்லிகா வழக்கு - திலகவதி ஐபிஎஸ் பகிரும் தடயம்: 51

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
thilagavathi-ips-rtd-thadayam-51  

பல்வேறு கொலை, குற்றச் சம்பவங்களை ‘தடயம்’ என்னும் தொடரின் வழியே தமிழ்நாடு காவல்துறையின் முதல் பெண் இயக்குநர், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி நம்மிடம் விளக்கி வருகிறார். அந்த வகையில் சயனைடு மல்லிகா வழக்கு பற்றி விளக்குகிறார். 

இந்த வழக்கு கர்நாடகாவில் 18. 12. 2007 அன்று வெளிச்சத்திற்கு வந்தது. ஏரியூர் சித்தேஸ்வர சுவாமி கோயிலில் தங்கும் சத்திர அறைகளின் பொறுப்பாளர் மாதவனிடம் ஒரு அறையில் இருந்து கெட்ட வாடை வந்ததின் பேரில் அந்த 28-ம் நம்பர் ரூமை திறந்து பார்த்த போது ஒரு 65 வயது மதிப்புள்ள ஒரு வயதான பெண்மணியின் அழுகிப் போன ஒரு  சடலம் கிடைக்கிறது.  விசாரித்ததில் 15ஆம் தேதி அதாவது ஒரு மூன்று தினங்களுக்கு முன் தாயும், மகளுமாக வந்து அட்வான்சை கட்டி விட்டு வழிபாட்டுக்கு  வந்திருப்பதாக அறிமுகப்படுத்திக் கொண்டு ரிஜிஸ்டர் புக்கில் லட்சுமி பாண்டவபுரம் என்று கையெழுத்து போட்டு ரசீது வங்கியிருந்தனர்.  அடுத்ததாக அந்த ஊர் இன்ஸ்பெக்டருக்கு தகவல் செல்கிறது. 

சம்பவ இடத்தில் வழக்கமாக செய்யும் ஃபார்மாலிட்டியும் செய்து விசாரணை நடக்கிறது. அதே சமயம் கோயில் அருகே நிறைய பெண் சடலங்கள் விழுந்து கொண்டே இருக்கிறது. மேலும் அம்ருத்தூர் என்ற போலீஸ் ஸ்டேஷனில் அஞ்சனப்பா என்பவர் என் அம்மாவை மூன்று நாட்களாக காணவில்லை என்று புகார் அளித்திருந்தார். பத்திரிக்கையில் இந்த சம்பவம் பிரபலம் அடைகிறது. இன்ஸ்பெக்டர் உமேஷ் என்பவர் மூலம் டெப்டி கமிஷனர் கே.வி.சரத் சந்திரா ஐபிஎஸ் என்பவர் ஒரு குழு அமைத்து கிடைத்திருக்கும் எல்லா வழக்குகளையும் ஒன்று சேர்த்து விசாரணையை அடுத்த நிலைக்கு கொண்டு செல்கின்றனர். பக்கத்து அறையில், அந்த வரிசையில் இருந்தவர்கள் கூறிய அடையாளங்களை வைத்து அந்த குற்றவாளியை ஒரு டிஜிட்டல் புகைப்படமாக தயாரிக்கின்றனர். நகை கடை, அடகு கடை சென்று யாரும் சந்தேகம்படும்படி நகை அடகு வைக்கிறார்களா என்று உரிமையாளர்களிடம் கண்காணிக்கும்படி தகவல் சொல்கின்றனர். 

இதற்கிடையில் கிடைத்த பிணம், தன் தாயை காணவில்லை என்ற புகார் அளித்தவரின் தாய் தான் என்று உறுதி செய்யப்படுகிறது. அவருடைய ஃபோனை காவல்துறை உதவியோடு தேடிய போது, அங்கே இருக்கும் கடைகளில் ஒரு செல்போனை விற்பனை செய்ய முயற்சி செய்திருப்பதை பார்த்து போலீஸ் பையை வாங்கி செக் செய்யும் போது அதில் ஒரு சைனைட் குப்பி பாட்டில்ஸ் நிறைய கிடைத்திருக்கிறது. ஒரு அடகு கடை ரசீது, கொஞ்சம் நகை, தங்கியிருந்த கோயில் வளாகத்து அறை சாவி, மற்றும் ரசீது இருக்கிறது. அந்த பெண்மணியை கைது செய்து மேற்கொண்டு விசாரித்ததில் கடைசியாக தான் குற்றத்தை ஒப்புக்கொள்கிறேன் என்று வழிக்கு வர மேஜிஸ்ட்ரேட் முன்பு வாக்குமூலம் வாங்குகின்றனர். தன் கதையை சொல்கிறார். பெங்களூர் அருகே கக்கலிபுரா தான் சொந்த ஊர். ஐந்தாம் வகுப்பு வரை தான் படித்திருந்தேன். குடும்பத்தில் கடுமையான வறுமை. அதனால் நிறைய அவமானங்களை சந்தித்து இருந்தேன்.  என்னை தேவராஜ் என்ற டைலருக்கு 15 வயதில் திருமணம் செய்து வைத்து விட்டனர். 

தனக்கு மூன்று குழந்தைகள். வருமானம் குறைவு என்பதால் அருகில் இருக்கும் வீடுகளில் நான் வீட்டு வேலை செய்து வந்தேன். ஆனால் அந்த வீட்டின் வசதிகளை பார்க்கும் பொழுது, நிறைய ஏக்கம் இருந்தது. சிறிய திருட்டுகள் செய்தேன். ஒருமுறை பிடிபட்டு ஆறு மாதம் சிறை தண்டனையும் அனுபவித்திருந்ததாக சொன்னார். ஜெயிலுக்கு போய் வந்தும் மீண்டும் திருட்டை தொடர்ந்து கொண்டு செய்கிறார். கணவர் கண்டித்ததும் ஒத்து வராததால் 1998-ல் இருவரும் பிரிகின்றனர். வறுமைக்காக மீண்டும் வீட்டு வேலை செய்ய ஒரு பொற்கொல்லர் வீட்டில் முதல் முறை பொட்டாசியம் சயனைடு பார்க்கிறார். அதன் மேல் வந்த ஈர்ப்பால் பொற்கொல்லர் அனுப்பி வைத்தார் என்று பொய் சொல்லி, சயனைடு நிறைய கடைகளில் வாங்குகின்றார். இதை வைத்து தனது திட்டமிட்ட கொலையை முதல் முறை செய்ய ஆரம்பிக்கிறார். கோயிலில் மவ்த்தா ராஜன் என்ற முப்பது வயது பணக்கார பெண்மணியிடம் பேச்சு கொடுத்து அவர் தன் குடும்பத்தில் மன நிம்மதி இல்லாததால் கோயில் வந்ததாக சொல்லவும் தனக்கு சிறப்பு மண்டல பூஜை தெரியும் என்றும், தன் மேலே சாமி உத்தரவு கொடுக்கும். கடும் கஷ்டத்தை போக்க இந்த மண்டல பூஜை செய்ய வேண்டும் என்று ஏமாற்றுகிறார்.

ஆனால் அடுத்தவர்களுக்கு தெரியாமல் இதை ரகசியமாக செய்ய வேண்டிய பூஜை என்று சொல்லி வீட்டில் இருக்கும் எல்லா நகைகளையும் போட்டுக் கொண்டு சர்வ அலங்காரமாக அம்மன் முன்னாடி உட்கார வேண்டும என்று ஏமாற்றி திட்டம் போட்டு நம்ப வைத்து அவர் கண்களை மூடி வேண்ட சொல்லி விட்டு சைனைடு கலந்த நீரை வலுக்கட்டாயமாக வாயை திறக்க வைத்து ஊற்றி விடுகிறார். அந்தப் பெண்மணி உயிரை விட்டதும் போட்டிருந்த எல்லா நகைகளையும் கழட்டி எடுத்துக் கொண்டு தப்பிக்கிறார். யாரும் இந்த பெண்மணியை பார்க்கவில்லை என்பதால் அடையாளம் சொல்ல முடியாமல் போகவும் கேசை முடித்து விடுகின்றனர். இதுதான் இவரின் முதல் சயனைடு கொலையாக 1999 இல் நடந்தது. இவ்வழக்கு குறித்த மேலும் விவரங்களை அடுத்த தொடரில் காணலாம்...