'வதந்தி' வெப் சீரிஸ் வெளியீட்டு விழாவில் பங்கேற்று பேசிய இயக்குநரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யா, "நான் ஆக்டிங்ல எவ்வளவு இன்ட்ரெஸ்ட்டானவன்னு தமிழ்நாட்டுக்கே தெரியும். முக்கியமா உங்க எல்லாருக்கும் தெரியும். எல்லாருமே என்னை குளோசா ஃபாலோ பண்ணிட்டு இருப்பீங்க. எங்க இருந்து எப்படி வாழ்க்கை போயிட்டு இருக்குதுனு எனக்கு எப்போதுமே ஆதங்கம் உண்டு. பெரிய இடங்களுக்குப் போகணும்; ரீச் ஆகணும்; அப்படினு சொல்லி ரொம்ப போராடி; பல போராட்டங்களெல்லாம் பண்ணிட்டிருந்தேன்.
நல்லது பண்ணினா அதன் மூலமாவே நல்லது நடக்கும்னு சொல்லுவாங்க. என்னோட அசிஸ்டெண்ட் டைரக்டரா இருந்த ஆண்ட்ருஸால இன்னைக்கு எனக்கொரு இண்டெர்நேஷனல் பிரேக் கிடைச்சிருக்கு. வாலி-ல இருந்து எனக்கு அசிஸ்டெண்ட் டைரக்டரா இருந்தாரு. இன்னைக்கு வரைக்கும் என் கூட அசிஸ்டெண்ட் டைரக்டரா வொர்க் பண்ணிட்டு இருக்காரு. அவரு மூலமா எனக்கு இவ்வளவு பெரிய பிரேக் கிடைச்சிருக்கு. அவரு மூலமா கிடைச்சது எனக்கு சந்தோசமான விசயம்.
கண்லயே நல்ல பவர கொடுக்கக் கூடிய பர்ஃபார்மன்ஸ். ஒரு நடுக்கடலில் இருக்கக் கூடிய அமைதியும், அதனுடைய ஆழத்தையும் உணர வைக்கக் கூடிய ஒரு பர்ஃபார்மன்ஸ ஆண்ட்ருஸ் சார் என்ட இருந்து புல்அவுட் பண்ணிருக்காரு. அதுமட்டுமில்லாமல், சில நேட்டிவிட்டி டையலாக் எல்லாம் புடிச்சிட்டு வந்தாரு. ஊர் மக்கள் பேசுற பஞ்ச் டையலாக்க அவரு யூஸ் பண்ணிக்கிட்டாரு. உண்மை நடக்கும்; பொய் பறக்கும். பொய் எப்படி பறக்குது, அடுத்தவங்க வாழ்க்கையை எவ்வளவு பாதிக்குது, நடந்த ஒரு விசயத்தை அதனோட ட்ரூ பெர்ஷெப்ஷன கண்டுபிடிப்பதற்கு முன்னாடி, அத நாம எப்படியெல்லாம் நினைச்சிக்கிறோம், எப்படியெல்லாம் பேசுறோம்.
இவ்வளவு எமோஷனோட கனெக்டெடா ஒரு த்ரில்லர் வந்து, உலகத்தரம் வாய்ந்த இசையிலும், உலகத்தரம் வாய்ந்த ஒளிப்பதிவிலும், ஒரு உலகத்தரம் வாய்ந்த பர்ஃபார்மன்ஸிலும் ஆண்ட்ருஸ் சார் எல்லாருகிட்டையும், அந்த வேலையை கரெக்ட்டா வாங்கிருக்கிறாரு. யூ ஆல் என்ஜாய் திஸ். சுழலுக்கு அப்புறம் இண்டர்நேஷனல் ரிலீஸ் இது.
தமிழ்நாட்லேயே எத்தனையோ வெப் சீரிஸ் ரெடியாகி வந்துருக்கு. தமிழ்ல பெரிய படத்துக்கு ஸ்பென்ட் பண்ற பட்ஜெட்டுங்க இது. ஒரு மிகப்பெரிய பட்ஜெட்டை அவங்க புல்அவுட் பண்ணிருக்காங்க. கொரோனா காலத்தில் ஆர்.டி.பி.சி.ஆர். டெஸ்ட்டுக்கு மட்டுமே இருக்குங்க ஒரு கோடிக்கு பில்லு. தினமும் அதிகபட்சம் 170 முதல் 200 பேர் வரை சூட்டிங் ஸ்பாட்டில் இருப்பார்கள். ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானாலும், அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டது" எனத் தெரிவித்தார்.