Skip to main content

அஜித்துடன் இணையும் பிரபல காமெடி நடிகர் 

Published on 27/06/2018 | Edited on 27/06/2018
ajith

 

 

 

அஜித் - சிவா கூட்டணியில் உருவாகும் 'விஸ்வாசம்' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கி சமீபத்தில் முடிவடைந்தது. இதையடுத்து இதன் அடுத்தகட்ட படப்பிடிப்பு வட மாநிலங்களில் நடைபெறவுள்ளதாக செய்திகள் பரவி வந்தன. இதற்கிடையே அஜித் படங்களின் படப்பிடிப்பு பெரும்பாலும் தொடர்ந்து வெளி மாநிலங்களில் நடைபெறுவதால் தமிழ்நாட்டில் இருக்கும் சினிமா தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதாக அவ்வப்போது சர்ச்சைகளும் கிளம்பிய நிலையில் இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு வரும் 27 ஆம் தேதி (இன்று) முதல் சென்னையில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று ஆரம்பமாகும் படப்பிடிப்பில் அஜித் இளமை தோற்றத்தில் நடிக்க இருப்பதாகவும், அதில் அஜித்துடன் நடிகர் விவேக்கும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் அறிவிக்கபட்டுள்ளது. இதை உறுதிப்படுத்தும் வகையில் விஸ்வாசம் படத்தில் அஜித்துடன் நடிப்பது குறித்து நடிகர் விவேக் ட்வீட் செய்துள்ளார். அதில்.... "அன்பு நண்பர் அஜீத்துடன் மீண்டும் கரம் கோர்ப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் . வாழ்த்திய ரசிகப் பெருமக்களுக்கு என் நன்றிகள். எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வேன்"  என பதிவிட்டுள்ளார். 

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்