சென்னையில் தனியார் ஆதரவற்றோர் இல்லத்தில் இருக்கும் குழந்தைகளை விஷால் சந்தித்து பேசினார். அப்போது அவர்களின் கல்விற்கு நிதியுதவி வழங்குவதாக வாக்குறுதி கொடுத்தார். பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.
அப்போது செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அவரிடம் மிஷ்கின் பாட்டல் ராதா பட விழாவில் பேசியது ஆபாசமாகவும் மதுவை ஆதரித்து பேசுவதாகவும் எழுந்த விமர்சனத்தை குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த விஷால், “அவருக்கு இதே வேலையா போச்சு. மேடை நாகரீகம்னு ஒன்னு இருக்கு. ஆனால் சில பேருடைய சுபாவம் மாற்ற முடியாது. இளையராஜாவை அவன் இவன்னு சொல்வதற்கு யாருக்குமே அருகதை கிடையாது. அவர் கிட்டதட்ட கடவுளுடைய குழந்தை. அவருடைய பாடல்கள் மூலமாக நிறைய பேர் மனச்சோர்வில் இருந்து வெளியே வந்திருக்காங்க. அவர் ஒவ்வொருவருடைய இரத்தத்திலும் கலந்திருக்கிறார். மிஷ்கினின் பேச்சை வன்மையாகக் கண்டிக்கிறேன்” என்றார். இதனிடையே மிஷ்கின் தன் பேச்சிற்கு மன்னிப்பு கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்பு விஜய்யின் அரசியல் தொடர்பான கேள்விக்கு, “2026 ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல், தனி திரையரங்கம் போல் இல்லாமல் மல்டிப்பிளக்ஸ் போன்ற பல முனை போட்டியாக இருக்கும். 70 ஆண்டுகளுக்குப் பிறகும் இன்னும் தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் மக்கள் இருக்கிறார்கள். விஜய்யின் தேர்தல் அறிக்கைக்குப் பிறகு எனது நிலைப்பாட்டைத் தெரிவிப்பேன்” என்றார்.