Skip to main content

வெளியானது 'கோப்ரா' படத்தின் டீசர்!

Published on 09/01/2021 | Edited on 09/01/2021

 

vikram

 

இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் படம் 'கோப்ரா'. இப்படத்தில் நடிகர் விக்ரம் 7 கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். செவன் ஸ்கிரீன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லலித் தயாரிக்கும் இப்படத்திற்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நடிகர் விக்ரமின் பிறந்தநாளன்று வெளியிடப்பட்டது.

 

இந்நிலையில், படத்தின் டீசர் இன்று (09/01/2021) வெளியாகியுள்ளது. விறுவிறுப்பான காட்சிகள் நிறைந்த இந்த டீசர், வெளியான சில நிமிடங்களிலேயே லட்சக்கணக்கான பார்வையாளர்களால் பார்த்து ரசிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்