விஷால் - சுந்தர்.சி கூட்டணியில், தமன்னா நாயகியாக நடித்துள்ள 'ஆக்ஷன்' படம் நாளை வெளிவரவுள்ளது. இப்படம் தொடர்பான விழாவில் கலந்துகொண்ட இயக்குனர் சுந்தர்.சி படத்தின் இசையமைப்பாளர் 'ஹிப் ஹாப் தமிழா' ஆதி குறித்துப் பேசியது...
![csC](http://image.nakkheeran.in/cdn/farfuture/g4VLbMinUg73ua2kth5IhrOpqaqR-u-PYYyrDH2_Nzc/1573724639/sites/default/files/inline-images/731_1.jpg)
"நான் தொடர்ந்து ஆதி கூட படங்கள் பண்ணிட்டேன். என் படத்துக்கு அவர் இசையமைச்சுட்டார், அவர் இயக்கிய படங்கள் இரண்டை நான் தயாரிச்சுட்டேன். ஆனா, இந்தப் படத்துக்கு இசையமைக்க ஆதியை கூப்பிடக்கூடாதுன்னு நினைச்சேன். ஏன்னா, 'மீசைய முறுக்கு', 'நட்பே துணை' படங்களை தயாரிச்சேன், அந்தப் படங்கள் வெற்றியும் பெற்றன. ஆனா, அவர் படம் எடுக்க ரொம்ப டைம் எடுத்துக்குவார். அந்த ரெண்டு படங்கள் முடிச்சிட்டு 'நான் சிரித்தால்' என்ற படத்தை தொடங்கியதற்குப் பிறகு சிம்புவை வைத்து நான் 'வந்தா ராஜாவாதான் வருவேன்' முடிச்சுட்டேன். இன்னொரு படம் நான் நடிச்சுட்டேன். அதுக்கப்புறம் 'ஆக்ஷன்' என்று ஒரு பெரிய படத்தை இயக்கி ரிலீஸ் பண்றோம். ஆனா இன்னும் அவர் முடிக்கவில்லை. எடுக்கிறார், போட்டு பாக்குறார்... இப்படியே போய்க்கிட்டு இருக்கு.
ஒரு இயக்குனரா இது நல்ல விஷயம்தான். ஆனா ஒரு தயாரிப்பாளரா எனக்கு இது பெரிய பிரச்னை. ஏற்கனவே பிஸியா இருக்குற அவரை நாம கூப்பிடக்கூடாதுன்னு முடிவு பண்ணியிருந்தேன். ஆனால், நேரா வந்து 'அதெல்லாம் முடியாது, நான்தான் பண்ணுவேன்'னு சொல்லி என்னிடமிருந்து இசையமைப்பாளர் வாய்ப்பைப் அவர் பிடுங்கிச் சென்று இசையமைத்தார். இந்தப் படத்தை நான் கொடுக்கல, அவர் பிடுங்கிக்கொண்டார் என்றுதான் சொல்லணும். நான் நினைத்ததைவிட வேகமாக தன் பணியை முடித்துவிட்டார் ஆதி" என்று கலகலப்பாகக் கூறினார். ஆனாலும் அவர் பேச்சில் ஒரு தயாரிப்பாளரின் கவலை தெரிந்தது'' என்றார்.
![IIT](http://image.nakkheeran.in/cdn/farfuture/a_5g3Jtu_PCXO3iTuuqua0R0uHXqTmNrCJUwO7_stco/1573725806/sites/default/files/inline-images/IIT%20Madras.jpg)