பல்வேறு பொதுநல வழக்குகள் மூலம் பல விஷயங்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து தீர்வு கண்ட சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி, வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு கடந்த சில வாரங்களுக்கு முன் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு வயது 87. அங்கு சிகிச்சை பெற்றுவந்த டிராஃபிக் ராமசாமியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக நேற்று (04.05.2021) தகவல் வெளியான நிலையில், சிகிச்சைப் பலனின்றி இன்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு சமூக ஊடகங்களில் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்ற நிலையில், நடிகர் சூரி மறைந்த டிராஃபிக் ராமசாமிக்கு இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அதில்...
"சமுதாயத்தின் மீது அக்கறையும், நீதித்துறையின் மீது நம்பிக்கையும் கொண்டு சமுதாயத்தில் நிகழும் தவறான செயல்களுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவரின் குரல் ஓய்ந்துவிட்டது என்ற செய்தி வருத்தமளிக்கிறது. அவரது ஆத்மா இறைவனடி சேர பிரார்த்திக்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.