காப்பான் படத்தை தொடர்ந்து சூர்யா தற்போது நடித்து வந்த படம் சூரரைப்போற்று. இறுதிச்சுற்று படத்தை இயக்கிய சுதா கொங்கராவின் இயக்கத்தில் உருவாகும் படம் இது . சமீபத்தில் சூரரைப்போற்று படத்தின் ஒட்டுமொத்த ஷூட்டிங்கும் முடிவடைந்து, கடைசி கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
இந்த படத்தின் ஒட்டுமொத்த ஷூட்டிங் முடிவடைந்தவுடன் தன்னுடன் பணிபுறிந்தவர்களுக்கு தங்ககாசை அன்பளிப்பாக கொடுத்திருக்கிறார் சூர்யா. நாயகியாக அபர்ணா பாலமுரளி, இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ், ஒளிப்பதிவாளராக நிக்கேத் பொம்மிரெட்டி ஆகியோர் பணிபுரிந்து வந்தனர்.
மோகன் பாபு, ஜாக்கி ஷெராஃப், கருணாஸ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது. டெல்லியில் சில முக்கிய சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டதைத் தொடர்ந்து, மதுரையில் பிரதான காட்சிகள் படமாக்கப்பட்டது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி அனைவரையும் ஈர்த்தது.
ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை மையப்படுத்தி கதை உருவாக்கப்பட்டுள்ளது. ஷூட்டிங் முற்றிலுமாக முடிவடைந்த நிலையில் பின்னணி வேலைகளில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
இப்படத்தில் சூர்யா ’மாரா’ எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விரைவில் படத்தின் டீசர் வெளியாக உள்ளதாகவும், அதற்காக மாரா எனும் சிறப்பு தீம் மியூசிக்கை உருவாக்கி வருவதாகவும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.