Skip to main content

"எனது வாழ்க்கையில் சிறந்த தருணம்" - ரஜினி குறித்து சிவகார்த்திகேயன்

Published on 09/08/2023 | Edited on 09/08/2023

 

sivakarthikeyan about rajini

 

மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஷ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஜூலை 14 ஆம் தேதி வெளியான படம் 'மாவீரன்'. இப்படத்தில் கதாநாயகியாக அதிதி ஷங்கர் நடிக்க சரிதா, இயக்குநர் மிஷ்கின், யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். பரத் சங்கர் இசையமைத்துள்ள இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகியுள்ள நிலையில், நல்ல வரவேற்பை பெற்றது. படத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இயக்குநர் ஷங்கர், நடிகர் அருண் விஜய் உள்ளிட்ட பலரும் பாராட்டினர்.  

 

இந்நிலையில் ரஜினி, தொலைபேசி வாயிலாக பாராட்டியுள்ளதாக சிவகார்த்திகேயன் வீடியோ வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில்,"காஷ்மீரில் படப்பிடிப்பில் இருக்கிறேன். முதலில் மாவீரன் படம் 25 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. படம் பார்த்த அத்தனை பேருக்கும் நன்றி. என் ரசிகர்களுக்கு ஸ்பெஷல் நன்றி. இன்னொரு முக்கியமான விஷயம் ரஜினி சார் ஃபோன் பண்ணி வாழ்த்து சொன்னார். படக்குழு அனைவருக்கும் ரொம்ப ஸ்பெஷலான ஒரு ஃபீல்.

 

மாவீரன் படம் ரிலீஸ் அப்போ ரஜினி சார் ஊரில் இல்லை. இந்த முறை மிஸ் ஆகிடும் என்று நினைத்தேன். ஆனால் இவ்ளோ பிசிக்கு இடையிலும் மாவீரன் பார்த்துவிட்டு வாழ்த்து சொன்னது, மிகவும் சிறப்பு. ஃபோன் பண்ணி, 'சிவா, நான் நல்லா படம் முழுவதும் என்ஜாய் பண்ணேன். நல்லா நடிச்சிருக்கீங்க. கதை வித்தியாசமானதாக இருந்தது. எப்படி வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுக்குறீங்க' என கேட்டார். எனக்கு அப்படியே ஜிவ்வ்னு ஆகிடுச்சு. இதற்கெல்லாம் மிக பெரிய நன்றி தலைவா. உங்களுடைய மிக பெரிய ரசிகன். அதை எத்தனை முறை வேண்டுமானாலும் சொல்வேன். உங்களை பார்த்து தான் சினிமாவுக்கு வந்தேன். உங்களுக்கு பேனர் வச்சு உங்க சினிமாவை கொண்டாடியவன். அப்படி இருக்கிற ஒருத்தனுக்கு நீங்க படம் பார்த்துவிட்டு பாராட்டு தெரிவித்தது, எனது வாழ்க்கையில் சிறந்த தருணம். 

 

இதே நேரத்தில் எல்லாருக்குமே நாளைக்கு ரொம்ப ரொம்ப ஸ்பெஷல். ஜெயிலர் ரிலீஸாகிறது. அவருடைய சரித்திரத்தில் இன்னும் ஒரு சிறப்பான நாளாக நிச்சயம் இருக்கும். தலைவா...உங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம். எங்களை நீங்கள் என்றும் என்டர்டெய்ன் பண்ணிகிட்டே இருக்க வேண்டும். நாங்க உங்களை ரசிச்சு கொண்டாடிட்டே இருப்போம். லவ் யூ தலைவா. மெகா பிளாக் பஸ்டர் படமாக இந்த ஜெயிலர் இருக்கும்" என்றார். 

 

 

 

சார்ந்த செய்திகள்