Skip to main content

“அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்”- நடிகர் சித்தார்த் அறிவுறுத்தல்

Published on 17/03/2020 | Edited on 17/03/2020

சீனாவின் வுஹானில் தொடங்கி தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸால் உலகம் முழுவதும் இதுவரை 6518 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள இந்த கரோனா வைரஸால் 1,69,610 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தற்போது இந்தியாவிலும் பரவ ஆரம்பித்துள்ள இந்த வைரஸ் இதுவரை 110 பேரைப் பாதித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவில் இதுவரை இரண்டு பேர் கரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
 

sidarth

 

 

உலகமே கரோனா வைரஸால் பீதியடைந்துள்ள நிலையில் பல நிகழ்ச்சிகள் தள்ளிப்போடப்பட்டுள்ளது, ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகர் சித்தார்த் கரோனா வைரஸ் பரவுதல் குறித்து ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

அதில், "கரோனா வைரஸ் பாதிப்பு விவகாரத்தில் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். கையை சோப்புப் போட்டுக் கழுவுங்கள். யாருடனும் நெருங்கிப் பழகாதீர்கள். கொஞ்ச நாளைக்கு கை கொடுப்பது, கட்டிப் பிடிப்பதைக் குறைக்கலாம். கூட்டமாக இருக்கும் இடங்களுக்குச் செல்வதைத் தவிருங்கள்.

இதெல்லாம் செய்தாலும் ரொம்ப பயப்படுகிற நிலை என்று எதுவும் கிடையாது. தமிழ்நாட்டில் இன்னும் கரோனா வைரஸ் அந்த அளவுக்கு வரவில்லை. தமிழக அரசும் அவர்கள் நிலையிலிருந்து என்ன பண்ண வேண்டுமோ அதைச் செய்து கொண்டிருக்கிறது. இந்தியாவில் கரோனா வைரஸ் முற்றிலும் ஒழிய இறைவனை வேண்டிக் கொள்கிறேன். கூடிய விரைவில் அனைவரும் பழைய நிலைக்குத் திரும்புவோம்" என்று தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்