மலையாளம் மற்றும் தமிழ்ப் படங்களில் காமெடி கதாபாத்திரங்கள் மற்றும் பி கிரேட் படங்களில் நடித்து பிரபலமானவர், நடிகை சகிலா. தற்போது இவர் தயாரிப்பில் அடல்ட் காமெடி படம் ஒன்று தனி இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
'லேடிஸ் நாட் அலவுட்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை ஒருவர் பார்க்க ரூ.50 செலுத்த வேண்டும் என்று படக்குழு அறிவித்துள்ளது. சாய் ராம் தசரி என்பவர் இயக்கியுள்ள இப்படம் கடந்த வருடமே வெளியாக வேண்டியது. ஆனால், இப்படத்தைப் பார்த்த தணிக்கை குழு இப்படத்திற்கு எந்த மதிப்பும் தரவில்லை. இதனால் டெல்லியிலுள்ள தணிக்கை தீர்ப்பாயம் வரை இயக்குனர் சென்று இதற்குச் சான்றிதழ் வாங்க போராடிக் கொண்டிருந்தார். கரோனா அச்சுறுத்தலால் 100 நாட்களுக்கும் மேலாக திரையரங்குகள் திறக்கப்படவில்லை என்பதால், இந்தப் படத்திற்காக தனி இணையத்தளத்தை உருவாக்கி வெளியிட்டுள்ளனர்.
தெலுங்கில் இதுபோல வெளியிடப்படும் முதல் படம் இதுவாகும். மேலும், இந்தப் படத்தைக் கண்டிப்பாக பெண்கள் பார்க்க வேண்டாம் என்று சகிலா வேண்டுகோள் வைத்துள்ளார். கடந்த ஜூலை 20ஆம் தேதி இப்படம் ரிலீஸாகியுள்ளது.