Skip to main content

கார் விபத்தில் மயிரிழையில் உயிர்தப்பிய நடிகர்..! 

Published on 15/11/2019 | Edited on 15/11/2019

தெலுங்கு முன்னணி நடிகர் ராஜசேகர் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் இருந்து அதிகாலையில் காரில் வீட்டுக்கு புறப்பட்டு சென்றார். ஷம்சாபாத் பகுதியில் சென்றபோது கார் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அக்கம்பக்கத்தினர் காருக்குள் சிக்கிய ராஜசேகரை வெளியே தூக்கினர்.

 

f

 

 

விபத்து குறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வருவதற்கு முன்னால் ராஜசேகரை வேறொரு காரில் வீட்டுக்கு அனுப்பி விட்டனர். விபத்தில் சிக்கிய காரை போலீசார் சோதனை செய்தபோது அதில் இரண்டு வெளிநாட்டு வோட்கா பாட்டில்களும் ஒரு டம்ளரும் இருந்ததாக கூறப்படுகிறது. வேகமாக காரை ஓட்டி வந்ததால் விபத்து ஏற்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதற்கிடையே அவரது மனைவி நடிகை ஜீவிதா இதுகுறித்து கூறும்போது...''விபத்தில் ராஜசேகருக்கு காயம் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளார். தற்போது நலமாக இருக்கிறார்” என்றார். நடிகர் ராஜசேகர் தமிழில் ‘இதுதாண்டா போலீஸ்’ படத்தில் நடித்து பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சார்ந்த செய்திகள்