வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்து, லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகர் வெளியிட்டுள்ள படம் "மிக மிக அவசரம்". நடிகை ஸ்ரீபிரியங்கா பெண் கான்ஸ்டபிள் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படம் கடந்த நவம்பர் 8ஆம் தேதி உலகமெங்கும் வெளியானது.

பெண் காவலர்களுக்கு பணியில் நேரும் சிரமங்களை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தைப் பார்த்த பலரும் பாராட்டி வருகின்றனர். பெண்கள்படும் சிரமத்தை அப்படியே நமக்கு வெளி காட்டிய நடிகையின் நடிப்பையும் பலரும் பாராட்டினார்கள்.
செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் மாண்புமிகு கடம்பூர் ராஜூ, இப்படத்தின் நாயகி ஸ்ரீ பிரியங்காவை படத்தில் ஒரு பெண் காவலரை நடிப்பில் கொண்டு வந்திருப்பதாக நேரில் அழைத்துப் பாராட்டினார்.
அதேபோல இந்த படத்தை பார்த்த புதுச்சேரி முதலைமைச்சர் படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். இந்த படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளருமான சுரேஷ் காமாட்சி, நடிகை ஸ்ரீபிரியங்காவுக்கு சால்வை அணிவித்து பாராட்டினார்.
இந்நிலையில் இந்த படத்தின் இயக்குனரும் தயாரிப்பாளருமான சுரேஷ் காமாட்சி இந்த படத்திற்கு திரையரங்குகள் கிடைக்காமல் வருத்தத்துடன் ட்வீட் ஒன்றை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், “கொடுக்கிற மாதிரி கொடுப்பாங்களே..அப்படித்தான் ஆகிப்போச்சு.. திரையரங்குகள் மிகமிகஅவசரம் படத்திற்கு கிடைத்தது. காலைல ஷோ, மத்தியான ஷோவா கொடுத்தா யார் சார் தியேட்டருக்கு வருவாங்க? நான் விஜய் சார்,அஜீத் சார் படமா பண்ணியிருக்கேன்? சின்ன படங்களை சாவடிக்கிறாங்க” என்று தெரிவித்துள்ளார்.