Skip to main content

நயன்தாரா படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Published on 08/06/2021 | Edited on 08/06/2021

 

nayanthara

 

'அவள்' படத்தின் இயக்குநரான மிலிந்த் ராவ் இயக்கத்தில், விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடித்துள்ள படம் 'நெற்றிக்கண்'. ‘ப்ளைண்ட்’ என்ற கொரியப் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்கான இப்படத்தில் அஜ்மல் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கிரிஷ் இசையமைத்துள்ளார்.

 

முழுவீச்சில் நடைபெற்றுவந்த இப்படத்தின் படப்பிடிப்பு, கரோனா முதல் அலை காரணமாக தடைபட்டது. பின், நிலைமை சீரானதும் படப்பிடிப்பைத் தொடங்கிய படக்குழு, மொத்த படப்பிடிப்பையும் நிறைவு செய்தது. கரோனா இரண்டாம் அலை காரணமாக தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் இப்படத்தை நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிடும் முடிவில் தயாரிப்புத் தரப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

 

இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'இதுவும் கடந்து போகும்...' என்ற பாடல் முதல் பாடலாக வெளியாகும் என்றும் வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் படத்தின் தயாரிப்பாளர் விக்னேஷ் சிவன் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், 'இதுவும் கடந்து போகும்...' பாடல் வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, இப்பாடலானது ஜூன் 9ஆம் தேதி  காலை 9 மணிக்கு வெளியாகவுள்ளது. 
 

 

சார்ந்த செய்திகள்