Skip to main content

'மெரினா புரட்சி' படத்திற்கு 7 நாட்களுக்குள் தணிக்கை - நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

Published on 11/01/2019 | Edited on 11/01/2019
marina puratchi

 

 

2017 ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தமிழகம் மட்டுமின்றி உலகமெங்கும் வாழும் தமிழர்கள் தன்னெழுச்சியாக 8 நாட்கள் நடத்திய போராட்டத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட 'மெரினா புரட்சி' திரைப்படத்திற்கு 100 நாட்களாகியும் தணிக்கை தரப்படவில்லை. காரணம் சொல்லாமல் 2 முறை நிராகரித்துள்ளதாக படக்குழு அறிவித்தது. பட தயாரிப்பு நிறுவனம் நாச்சியாள் பிலிம்ஸ் சென்னை உயர்நீதி மன்றத்தில் இதுகுறித்து வழக்கு தொடர்ந்திருந்தது. மேலும் மெரினா புரட்சி திரைப்படத்தை பொங்கலுக்குள் தணிக்கை முடித்து திரையிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் நீதிமன்றம் இந்த வழக்கில் தற்போது தீர்ப்பளித்துள்ளார்கள். அதில்.... "இந்த தீர்ப்பு நகல் கிடைத்த 2 நாட்களுக்குள் படத்தின் இயக்குனர் எம்.எஸ். ராஜ் தன்னிடமுள்ள ஆதாரங்கள் விளக்கங்கள், நியாயங்களுடன் ரிவைசிங் கமிட்டி முன்பு ஆஜராக  வேண்டும். அதிலிருந்து 7 நாட்களுக்குள் தணிக்கைத்துறை, படத்திலுள்ள நல்ல நோக்கங்கள் மற்றும் அதன் தன்மை அடிப்படையில்  முடிவெடுக்க வேண்டும்" என்று உத்தரவிட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மெரினா புரட்சி திரைப்படத்திற்கு தணிக்கை சான்று கிடைத்தது !

Published on 29/12/2018 | Edited on 29/12/2018
marina

 

கடந்த 2017 ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தமிழகம் மட்டுமின்றி உலகமெங்கும் வாழும் தமிழர்கள் தன்னெழுச்சியாக எட்டு நாட்கள் நடத்திய போராட்டத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட 'மெரினா புரட்சி' திரைப்படத்திற்கு 80 நாட்களாகியும் தணிக்கை தரப்படவில்லை. மேலும் காரணம் சொல்லாமல் இரண்டு முறை நிராகரித்துள்ளனர். வரலாற்றுச் சிறப்புமிக்க ஜல்லிக்கட்டு போராட்டத்தின் பின்னணியில் இருக்கும் உண்மைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக நாச்சியாள் பிலிம்ஸ் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

 

 

மெரினா புரட்சி திரைப்படத்தை பொங்கலுக்குள் தணிக்கை முடித்து திரையிட வேண்டும் என்று கோரியுள்ளனர். இதற்கு நீதியரசர்கள் தணிக்கைத் துறைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்கள். இதற்கிடையே சிங்கப்பூர் அரசு மெரினா புரட்சி திரைப்படத்திற்கு தணிக்கை சான்று வழங்கியிருக்கிறது. சிங்கப்பூர் அரசின் தணிக்கை பிரிவான (Info communications Media Devolpment Authorities) மெரினா புரட்சி திரைப்படத்திற்கு NC 16 என்ற பிரிவின் கீழ் 'தமிழகளின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான போராட்டத்தின் உண்மைகளை சொல்லும் படம்' என்று குறிப்பிட்டிருக்கிறாரகள். உலகெங்கிலுமுள்ள தமிழர்களின் இதயங்களுக்கு மெரினா புரட்சியை கொண்டு சேர்க்கும் நாச்சியாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் போராட்டத்திற்கு சிங்கப்பூர் அரசின் தணிக்கை சான்று மேலும் வலு சேர்த்திருக்கிறது.

 

 

Next Story

'மெரினா புரட்சி' படத்தை தடை செய்கிறதா பீட்டா !

Published on 08/11/2018 | Edited on 08/11/2018
marina puratchi

 

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மறைந்திருக்கும் உண்மைகளைப் பேசும் எம்.எஸ். ராஜ் இயக்கத்தில் உருவான மெரினா புரட்சி படத்தைப் பார்த்த தணிக்கை குழு எந்த காரணமும் சொல்லாமல் படத்தை (Revising Committee) ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்பினர். படத்தை பார்த்த நடிகை கவுதமி தலைமையிலான ரிவைசிங் கமிட்டிக்கு குழு எந்த காரணமும் சொல்லாமல் மீண்டும் தடை விதித்துள்ளனர்.

 

 

 

Indian Cinematograph Act 1983 விதியின்படி ரிவைசிங் கமிட்டி மறுப்பு தெரிவித்தால் FCAT எனப்படும் டெல்லி டிரிப்யூனல் சென்று தணிக்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்பது வழக்கமான நடைமுறை. ஆனால் மெரினா புரட்சி படத்திற்கு அந்த வாய்ப்பும் மறுக்கப்பட்டு 2வது ரிவைசிங் கமிட்டிக்கு படம் அனுப்பப்பட்டிருக்கிறது. காரணமின்றி நிராகரிப்பதும் காலதாமதம் செய்வதும் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. குறிப்பிட்ட விலங்குகள் நல அமைப்பின் கடிதம் தான் இந்த தடைக்கு காரணமாக இருக்குமோ எனும் ஐயம் எழுகிறது. தமிழர்களின் பெருமை மிகு அடையாளமான ஜல்லிக்கட்டு போராட்டத்தை உரத்த குரலில் சொல்லும் மெரினா புரட்சி படத்தை  முடக்கும் அனைத்து சதிகளையும் முறியடிக்க நாச்சியாள் பிலிம்ஸ் குழுவினர் உறுதியுடன் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.